சசிகுமார் நடித்துள்ள “கொம்பு வெச்ச சிங்கம்” பற்றி இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

3

பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வெச்ச சிங்கம் பற்றி இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்  கூறியதாவது:

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

எனது கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்துள்ள, எனது நான்காவது படைப்பான “கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இது வரை “சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்” என எனது மூன்று படைப்புகளுக்கும் நீங்கள் அளித்த ஆதரவிற்கு பெரும் நன்றிகள். அதே ஆதரவை எனது நான்காவது படைப்பிற்கும் தருவீர்கள் என நம்புகிறேன் உங்கள் அனைவரது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல

“கொம்பு வச்ச சிங்கம்டா” படத்தின் கதை மத்திய தமிழகமான கரூர் மாவட்டத்தில் நடக்கிறது.

ஒரு பெரும் கிராமமான கிருஷ்ணராயபுரம் ஊரின் பெரியவர் தெய்வேந்திரன். அந்த கிராமத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பிடித்தமானவரான தெய்வேந்திரனின் சொல்லுக்கு ஊரே கட்டுப்படும். அப்படிப்பட்ட தெய்வேந்திரனின் ஒரே மகனுக்கு, ஐந்து நண்பர்கள். “மண்ணு தின்ற வயசுல இருந்து ஒன்னா திரிஞ்ச பயலுக” சாதி மத வேறுபாடின்றி பழகும் இவர்களின் நட்புக்குள், ஊரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் பிரிவினையை ஏற்படுத்துகிறது. இரண்டு அணிகளாக பிரிந்த இவர்களது நட்புக்குள் என்ன நடந்தது. ஒன்றாய் பிறக்கவில்லை என்றாலும் ஒன்றாய் வளர்ந்த இவர்களின் நட்பின் வாழ்வு தனை சூது கவ்வியது. மீண்டும் நட்பு வென்றதா? என்பதே ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் கதை.

இதில் பெரியவர் மகனாக – நடிகர் சசிகுமார்  இவருக்கு ஜோடியாக தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார். ஊர்ப் பெரியவர் தெய்வேந்திரனாக மறைந்த இயக்குநர் மகேந்திரன் நடித்திருக்கிறார்.  சசிகுமாரின் உயிர்நண்பனாக சூரி நடித்துள்ளார்.

மற்றும் ஹரீஷ் பேராடி, தயாரிப்பாளர் இந்தர்குமார், ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ‘பிச்சைக்காரன்’ தீபா ராமானுஜம், ‘மருது’லீலா பாட்டி, நண்பர்களாக ராகவ் விஜய், அபி சரவணன், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவு  என்.கே ஏகாம்பரம். இசை  திபு நிணன் தாமஸ். எடிட்டிங்  டான் போஸ்கோ. பாடல்  யுகபாரதி, ஜி கே பி.,அருண் ராஜ்  காமராஜ் சண்டைப்பயிற்சி  அன்பறிவு. நடனம்  நந்தா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எஸ்.ஆர்.பிரபாகரன். தயாரிப்பு  இந்தர்குமார்.

இவ்வாறு இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் கூறினார்,.

Leave A Reply

Your email address will not be published.