இயக்குனர் சுசீந்திரன் தாயார் காலமானார்

டைர்க்டர் டி.ராஜேந்தர் இரங்கல்..

15

வெண்ணிலா கபடி குழு, . நான மகான் அல்ல படங்களை இயக்கியதுடன் தேசிய விருதும் வென்றவர் சுசீந்திரன், இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் நேற்று பொங்கல் தினத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.சுசீந்திரன் தாயார் ஜெயலட்சுமி இன்று காலை ஒட்டன்சத்திரத்தில் திடீர் மாரடைப்பில் காலமானார். அவருக்கு வயது 62. சசீந்திரன் தந்தை நல்லுசாமி. இவரது தம்பி தயாரிப்பாளர் நல்லுசாமி பிக்சர்ஸ் சரவணன். மேலும் ஒரு சகோதரரும் சகோதரியும் உள்ளனர். ஜெயலட்சுமி உடல் தகனம் இன்று மாலை நடக்கிறது.

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தலைவர்  டி. ராஜேந்தர்  வெளியிட்ட இரங்ல செய்தியில்.’ பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் தாயார் திருமதி ஜெயலக்‌ஷ்மி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அம்மையாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.