கொல்லிமலையில் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா

4

கொல்லிமலை, வரலாற்றில் வல்வில் ஓரி என்ற கடையெழு வள்ளல்களில், மன்னர் களில் ஒருவர் ஆட்சி செய்த மலைப்பரப்பாகும். இலக்கியத்தில் குறிஞ்சி நிலப் பகுதியாய் வரும் இந்த கொல்லிமலை, சித்தர்களும் அபூர்வ சக்திகளும் நிரம்பிய இடமாகக் கருதப்படுகிறது.

பெரியண்ணன் கோவில், எட்டுக்கை துர்க்கை அம்மன், அறப்பளீஸ்வரர் என்ற சக்திமிகு தெய்வங்கள் இங்கு குடி கொண்டுள்ளதாய் நம்பிக்கை. கொல்லி மலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்த தில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலை யின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.

சாதாரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத் தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கை யாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி.

இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம் எஸ் மூவிஸ் கே முருகன் தயாரிப்பில், பா விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப் படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது. ஆகாயகங்கை அருவிக் கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல் லாம் சமாளித்து தொழில் நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்து கொண்டு அருவிக் கரையை பதினொரு மணிக்கு அடைந்துள் ளனர். அதன் பிறகு ஏராள மான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாய கங்கை பகுதியில் பிரபு தேவா, மகிமா நம்பியார், தேவதர்ஷினி, தினா, அர்ஜே உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.

உணவு தயாரித்து தரும் தொழிலாளி முதல் உதவி இயக்குநர்கள் வரை அத்தனை பேரும் மிகுந்த ஒத்துழைப்போடு வலிகளையும் சிரமங் களையும் பொருட்படுத் தாமல் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற் காக வேலை செய்து கொடுத்தது படத்தி னுடைய தனி சிறப்பாகும் என்று தயாரிப்பாளர் கே முருகன் சிலாகித்துக் கூறினார்.

பிரமாண்ட பொருட் செலவில் எம் எஸ் மூவிஸ் கே முருகன் தயாரிப்பில் பா விஜய் இயக்கத்தில் உருவாக்கும் இதில் பிரபுதேவாவுடன் நடிப்பில் உருவாகி வரும் இதில்ம ஹிமா நம்பியார்,  கலையரசன், நாசர், அஜெய், தீனா, தேவதர்ஷினி, இயக்குநர் நட்டு தேவ், ஜெய்சன் ஜோஸ், சந்தோஷ், முரளிவிஜய், ரேவதி தரண், குஹாசினி, தீபிகா, சுபாஷ், சரவணன், ஸ்ரீராம், அகத்தியர், ஸ்ரீதேவி

நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ் சரவண ரவிக்குமார் (எஸ்பிபி காலனி – ஈரோடு), ஒளிப்பதிவு தீபக் குமார் பதி, கலை சரவணன், இசை.கணேஷ், எடிட்டர்  சான் லோகேஷ்,ஸ்டண்ட்  கணேஷ், உடைகள்  சாய், ஆடை வடிவமைப்பாளர் டோரதி,l

ஒப்பனை: குப்புசாமி
ஸ்டில்ஸ்: அன்பு
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Leave A Reply

Your email address will not be published.