இயக்குனராக அறிமுகமாகும் பாரதிராஜா மகன் மனோஜ்

17

தாஜ்மகால் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் மனோஜ். பல்வேறு வெள்ளி விழா படங்களை இயக்கி அளித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன்.
மனோஜ் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவர் இயக்குனர் ஆகவிருப்பதாக சமீபகாலமாக தகவல் வெளியாகி வந்தது. அதற்கான நேரம் வந்திருக்கிறது.

லிப்ரா புரடக்‌ஷன் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் மனாஜ். அவருக்கு பாரதிராஜா ஆசியும் வாழ்த்தும் தெரிவித்தார். விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்ப குழுவினர் விவரம் அறிவிக்கப்பட உள்ளது. 2021ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் படம் திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.