பாலு மகேந்திரா 7வது நினைவு நாளை முன்னிட்டு ஆவணப்பட பயிற்சிப்பட்டறை

பிப்ரவரி 13,14&15l பாலுமகேந்திரா நூலகம் நடத்துகிறது..

16

திரைப்படம் ஓடிடி வருகைக்குபின் பல்வேறு பரிணாமங்களை வளர்ந்து வருகிறது .வெப் சீரீஸ் வருகைக்குப் பின் கதைப்படங்களைத்தாண்டி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்

ஆகியவற்றின் ரசிகர்களும் அதிகரிக்கத்துவங்கியிருக்கின்றனர். இந்த மாற்றங்களின் எதிரொலியாக தமிழகத்திலும் பலரும் ஆவணப்படங்களை கற்கவும் எடுக்கவும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.. இச்சூழலில் தான் ஆவணப்படங்களை எடுக்கும் முறை குறித்து பயிற்சிப்பட்டறை ஒன்றை பாலுமகேந்திரா நூலகம் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது

வரும் பிப்ரவரி 13 பாலுமகேந்திரா அவர்களின் 7 வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 13,14 &15 ஆகிய 3 நாட்களில் ஆவணப்பட பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறது. இயக்குனர் படத்தொகுப்பாளர் லெனின் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க தொடர்ந்த மூன்று நாட்களும் தமிழகத்தின் முன்னணி ஆவணப்பட இயக்குனர்கள் திரு அம்ஷன் குமார் . திரு. சிவக்குமார் , திரு. காஞ்சனை சீனிவாசன் , திரு .அமுதன் ஆர்.பி. திரு.கோம்பை அன்வர் , திரு. சோமிதரன் ஆகியோர் பங்கேற்று ஆவணப்படங்களுக்கான முன் தயாரிப்பு . கள ஆய்வு முன்களப்பணி, திரைக்கதை , இயக்கம் படத்தொகுப்பு குரல் பதிவு போன்ற துறைகளில் திரையிடலுடன் வகுப்புகள் எடுக்க விருக்கின்றனர.

 

Leave A Reply

Your email address will not be published.