டான் – விமர்சனம்!

3

டிப்பு: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜெ.விஜய், ஷிவானி, ஆதிரா, சிங்கம் புலி, முனிஸ் காந்த், காளி வெங்கட், ராஜூ, ஷாரிக் ஹாசன், மனோபாலா, கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்லாத் சரத், டத்தோ ராதாரவி, செல்லா, ஸ்வேதா வெங்கட்,

தயாரிப்பு: சுபாஷ்கரன், சிவகார்த்திகேயன்,

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: கே.எம்.பாஸ்கரன்

இயக்கம்: சிபி சக்ரவர்த்தி

வில்லேஜ் ஒன்றில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், சிவகார்த்திகேயன் மகனாக பிறக்கிறார். தான் படும் கஷ்டம் தன் மகனுக்கு வர கூடாது என்று நினைத்து, சிவகார்த்திகேயனை படித்து பெரிய ஆளாக்க நினைக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், சிவகார்த்திகேயனோ படிக்காமல் பெரிய ஆளாக மாற நினைக்கிறார். அதன்பின் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கு ஈகோ பிரச்சனை ஏற்படுகிறது. இதை அடுத்து சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் தடுக்கிறார். அதனால் எஸ் ஜே சூர்யாவை காலேஜை விட்டு விரட்டுவதால் டான் ஆனவர் வாழ்க்கையில் சாதித்தாரா? என்பதே படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை முழுசாக கவர்ந்து இருக்கிறார். குறிப்பிட்டு சொல்வதானால் காதல், காமெடி, டான்ஸ், ஃபைட், சென்டிமெண்ட் என மீண்டும் ’ஜாலி வாலா’ பட்டாஸாய் வெடித்திருகிறார். . பள்ளி காலத்தில் பிரியங்காவை ‘பிரியம்’காவாக்க பின்னால் சுற்றுவது, கல்லூரியில் சேட்டைகள் செய்வது என நம் பள்ளிக் கல்லூரி வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கிறார். இப்பேர்ப்பட்டவர் இறுதியில் கண்கலங்க வைத்திருக்கிறார் என்பதுதான் ஹைலைட். செம கியூட்டாக இருக்கிறார் பிரியங்கா மோகன். அதைத் தாண்டி சொல்லவும் ஏதுமில்லை, சொல்லவும் முடியவில்லை.

படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. பல இடங்களில் சாதாரணமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்டிப்பான அப்பாவாக மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரக்கனி. ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

மாணவர்களின் கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம், இளம் இயக்குனர்களின் உணர்வை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல் பட இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இயக்கி இருக்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை சிறப்பு. பாஸ்கரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

மொத்தத்தில் ‘டான்’ – கைத்தட்டல் வாங்கி விடுகிறான்

Leave A Reply

Your email address will not be published.