மாதவன் நடிக்கும் மாறா குறித்த துல்கர் சல்மான் கருத்து..

26

சார்லி முதல் மாறா வரை: ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வரவிருக்கும் மாறா திரைப்படத்துக்காக மனமுருகச் செய்யும் ஒரு கவிதைக்கு குரல் கொடுத்துள்ளார் துல்கர் சல்மான்
அமேசான் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான மாறா வரும் ஜனவரி8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மேலும் இப்படம் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் காணக்கிடைக்கும்.

திலிப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இந்த தமிழ் காதல் ம்யூசிக்கல் திரைப்படம் நிச்சயம் இந்த புத்தாண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக உள்ளது.
துல்கர் சல்மான் நடித்த மலையாளத் திரைப்படமான சார்லி-யின் தழுவலே மாறா. அசல் படத்தின் கருவை அழகான முறையில் எடுத்து மாறா மற்றும் பாருவின் புதிய மற்றும் தனித்துவமான ஒரு மாயாஜால உலகை நமக்கு இப்படம் தருகிறது. அன்பு மற்றும் பாராட்டை வழங்கும் வகையில் துல்கர் சல்மான் (எ) சார்லி நினைவுகளால் நெய்த மனமுருகச் செய்யும், உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் இதயத்தை உடனடியாக தொடும் ஒரு கவிதையை மாறாவுக்காக வாசித்துள்ளார்.
அந்த பதிவை இங்கே பார்க்கலாம்:

முன்னதாக, ஆர் மாதவன் தனது நண்பர் துல்கரின் விசேஷ கவிதைக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இயக்குநர் திலீப்பும் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.