ஏலே (பட விமர்சனம்)

54

ஏலே (பட விமர்சனம்)
படம்: ஏலே
நடிப்பு: சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி, சனா உதயகுமார், கைலாஷ், அகல்யா, தமிழரசன், சுதர்சன் காந்தி, கணேஷ், சரண்யா ரவிச்சந்திரன் ஆனந்த்

இசை: கேபர் வாசுகி, அருள்தேவ்
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
தயாரிப்பு: எஸ்.சசிகாந்த்
கிரியேட்டிவ் தயாரிப்பு: புஷ்கர் காயத்ரி
இயக்கம்: ஹலிதா சமீம

ஊருக்குள் சைக்கிளில் சென்று  ஐஸ் விற்கும் சமுத்திரக்கனி குழந்தைகளை சரியாக கவனிக்காமல் வெட்டியாக சுறறுகிறார். அடுத்த வீட்டு கோழியை அடித்து குழம்பு வைப்பது பையன் உண்டியலை உடைத்து காசு திருடுவது, பணத்துக்காக பிள்ளையை பணக்கார வீட்டில் தத்து தர முயல்வது என  அடாவடி செய்கிறார். தந்தையின் போக்கு பிடிக்காமல் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டு சென்னைக்கு சென்றுவிடுகிறார் மகன் மணிகண்டன்.  தந்தை இறந்துவிட்டார் என்று அறிந்து ஊர் திரும்புகிறார். பிணமாக கிடக்கும் சமுத்திரக்கனியை அவருக்கு அருகில் சென்று திட்டி தீர்க்கிறார். ஊர் மக்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கின்றனர். பந்திக்கு ஏற்பாடு நடக்கும்போது பிணமாக இருந்த சமுத்திரக்கனி காணாமல் போய்விடுகிறார், பிணத்தைதேடி மகனும், நண்பர்களும் ஊர் முழுக்க அலைகிறார்கள். இதற்கிடையில் பண்ணையார் மகளை காதலித்த மணிகண்டன் அவருக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க உள்ளது என்பது அறிந்து சோகாமாகிறார். காணாமல் போன சமுத்திரகனியின் பிணம் கிடைத்தத்தா? பண்னையார் மகள் திருமணாம் நடந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

சின்ன வயதில் ஊர்பக்கம் சைக்கிளில் பெட்டியில் குச்சி ஐஸ் விற்றவரின் ஞாபகம் பலருக்கும் இருக்கும் அந்த கால கட்டத்துக்க்கு ரசிகர்களை இழுத்து சென்றுவிடுகிறார் இயக்குனர். குச்சி அஈஸ் விற்பவராக சமுத்திரக்கனி அடித்திருக்கிறார். காட்சி தொடக்கமே சமுத்திரக்கனி பிணமாக கிடப்பதை காட்டிவிட்டு அங்கிருந்து சிறிது சிறிதாக பிளாஷ்பேக்கில் கதையை சொல்வது ரசிக்க வைக்கிறது.

சமுத்திரக்கனி பிணமாக நடிக்கிறார் என்பதை அவ்வளவு எளிதில் யூகித்துவிட முடியவில்லை. மனுஷன் ஆறடி உசரத்திலிருந்தாலும் சின்ன்பிள்ளைகளின் சேட்டையை செய்து ஜமாய்க்கிறார். சமுத்திரக்கனியின் மகன் மணிகண்டன் எதார்த்தமாக நடித்து கவர்கிறார். தந்தையின் போக்கு பிடிக்காமல் அவரை திட்டுவதும் யாரவது அவரை பற்றி தவறாக பேசினால் அவர்களை அடித்து தந்தையின் மீதான பாசத்தை உணர்த்துவதுமாக நடித்து கவர்கிறார்.

பண்ணையார் வீட்டு பெண் மதுமதியை தனது காதல் வலையில்  வீழ்த்தும் மணிகண்டன் அவருடன் அளவுக்கு மீறாமல் காதலை பகிர்ந்து காதலின் புனிதத்தை காப்பாற்றுகிறார். கிராமத்து பெருசுகள் செய்யும் ரவுசுகள் ரகளை சமாச்சாரம். திடீரென்று கதையில் இரண்டாவது சமுத்திரக்கனியை காட்டி இரட்டை வேடத்துக்கு காரணம் சொல்வது லக லக. தனிப்பட்ட காமெடியன்கள் என்று யாரும் இல்லை அங்கிருக்கும் பெருசுகளே கலகலப்பாக பேசி காமெடி செய்திருப்பது காட்சியோடு ஒன்ற வைக்கிறது,

எஸ்.சசிகாந்த் தயாரித்திருக்க, புஷ்கர் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பு செய்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மண்வாசனையுடன் மணக்கிறது.   கேபர் வாசுகி, அருள்தேவ் இருவர்  இசை  அமைத்திருக்கின்றனர்.  இயக்குனர் ஹலிதா ஷமீம் மீண்டுமொருமுறை தன்னை திறமையான இயக்குனர் என நிரூபித்திருக்கிறார்.

ஏலே- உருகவைக்கும் சென்ட்டிமென்ட் ஐஸ்.

Leave A Reply

Your email address will not be published.