எம் ஜி ஆரை அறிமுகப்படுத்திய எல்லிஸ் ஆர் டங்கன் காலமான தினமின்று

2

11-5-1909ல் பிறந்த எல்லிஸ் ஆர்.டங்கன் ஐரீஷ் நாட்டைச் சேர்ந்த அமெரிக்கன் ஆவார்.1936 ஆண்டு முதல் 1950 வரை இந்தியாவில் பல தமிழ், ஹிந்தி படங்களை இயக்கினார்.

எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா, பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை திரைக்கு அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு..

நந்தனார் என்னும் தமிழ் படத்தில்..இவர் பங்கு இருந்தாலும்..இவர் இயக்கிய முதல் படம்..எஸ்.எஸ்.வாசனின் கதையான சதி லீலாவதி ஆகும்.இது எம்.ஜி.ஆரின் முதல் படம்.1936ல் இப்படம் வெளிவந்தது. பின், சீமந்தனி, இரு சகோதரர்கள், அம்பிகாபதி,சூர்ய புத்திரி,சகுந்தலா,காளமேகம்,தாசிப்பெண்,வால்மீகி,மீரா, பொன்முடி ஆகிய படங்களை இயக்கினார்.


சகுந்தலா, மீரா ஆகிய படங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார். .மீரா படத்தை ஹிந்தியிலும் இயக்கினார்
பொன்முடி என்ற படம்..புரட்சிக் கவிஞரின் கதை ஆகும்.

இவர் இயக்கிய கடைசி படம் கலைஞரின் மந்திரி குமாரி ஆகும்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில்..கண்டிப்பாக இவருக்கு ஒரு இடம் உண்டு.

இந்தியாவில் இருந்த 15 ஆண்டுகளில் 17 படங்களை இயக்கியுள்ளார்.

1950க்குப் பின் அமெரிக்கா திரும்பியவர் 2001ல் அமரர் ஆனார்.

அந்நாளில் தமிழ்த் திரையில் அமெரிக்க கலாசாரத்தை பரப்பியதாகவும்..ஊடகங்கள் இவரை குறை சொன்னதுண்டு.

ஆனால்..திரைப் படங்களில் காபரே நடனத்தை அறிமுகப்படுத்தியது இவரே ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.