என் பெயர் ஆனந்தன் ( பட விமர்சனம்)

177

படம்: என் பெயர் ஆனந்தன்
நடிப்பு: சந்தோஷ். அதுல்யா ரவி, அரவிந்த் ராஜகோபால், தீபக் பரமேஷ், அருண் ஆத்மா
தயாரிப்பு: ஸ்ரீதர் வெங்கடேசன், கனகா வெங்கடேசன், கோபி கிருஷ்ணப்பா
இசை: ஜோஷ் பிரங்க்ளின்
ஒளிப்பதிவு: மனோ ராஜா
இயக்கம்: ஸ்ரீதர் வெங்கடேசன்
குறும்பட இயக்குனர் சந்தோ ஷுக்கு பெரிய ஹீரோவின் கால்ஷீட் கிடைக்கிறது. 50 கோடி செலவில் பிரமாண்ட படம் எடுக்கவுள்ளதாக தயாரிப்பாளர் அறிவிக்கிறார். மறுநாள் ஷூட்டிங். காரில் சந்தோஷ் பிரதாப் செல்லும் போது அதேகாரில் மறைந் திருக்கும் முகமூடி நபர் சந்தோஷை கடத்துகிறார். தனி அறையில் சேரில் அமர்த்தி அவரது கை கால்களை கட்டி வைத்து கடத்தல் நபரும் மற்றொரு நபரும் மிரட்டு கின்றனர். நீ என்ன படம் எடுக்கிறே என்று சந்தோ ஷிடம் அவர் இயக்கிய குறும்படம் பற்றி கேள்வி கேட்கின்றனர். இதற்கி டையில் ஷூட்டிங் வரவேண் டிய இயக்குனர் காணவில் லையே என்று படக் குழு தேட ஆரம்பிக்கிறது. கடத்தி வந்த நபர்கள் ஒவ்வொரு குறும் படங்களை போட்டு விளக்கம் கேட்டு அவரை கோப்பட வைக்கின்றனர். பேய் படம் எடுத்ததற்கு திட்டுகின்றனர். அடிமை சுதந்திரம் குறும்படத்தை பாராட்டி கூத்து கலைஞர் களின் வாழ்கையை பற்றி பேசுகின்றனர். இதில் வெறுப்படையும் சந்தோஷ் கூத்து கலைஞர்களை திட்டுகிறார். ஆத்திரம் அடைந்த கடத்தல் பேர் விழிகள் சந்தோஷை கன்னத்தில் அறைந்து தாங்களே கூத்து கலைஞர்கள் என்று சொல்லி அந்த கலையின் உன்னதத்தை புரியவைக்கின் றனர். இதற்கிடையில் சந்தோஷை தேடி போலீஸ் வருகிறது இறுதியில் நடந்தது என்ன என்பதை மெசேஜூடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.

என் பெயர் அனந்தன் படம் ஒரு வித்தியாசமான சிந்தனை யின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். கறுப்பு வெள்ளையில் சில ஆரம்ப காட்சிகள் பிறகு கதையோட் டத்தில் அது ஒரு குறும்படம், ஹீரோ சந்தோஷ் பிரதாப் இயக்கியது என்ற விவரம் தெரிகிறது. சில நிமிடங் களுக்கு ஒருமுறை காட்சிகள் முன்னும் பின்னுமாக மாறி மாறி வந்தாலும் குழப்பமில் லாமல் எடிட்டிங் செய்திருப் பது சிறப்பு.
ஹீரோவை கடத்தி வைத்தி ருக்கும் முகமூடி நபர் கேட்கும் கேள்வியில் அர்த்தங்கள் ஆயிரம் உள்ளது. சிவாஜி எவ்வளவு உணர்சிகளை வெளிப்படுத்தினார். அந்த கால படங்கள் எவ்வளவு கருத்துக்களை சொன்னது நீங்கள் ஏன் கருத்துள்ள படங்களை இயக்குவதில்லை என்று அடுக்கும் கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஹீரோ சந்தோஷ் மவுனம் சாதிப்பது இன்றைய படங்களின் அர்த்தமற்ற காட்சி களை கண்முன் கொண்டு நிறுத்துகிறது.
சினிமா ஒரு கலைதான் கலை களின் தொகுப்பாகத்தான் சினிமா இருக்க வேண்டும் என்று முகமூடி நபர் சொல்லும்போது பலரது கன்னத்தில் அறைவிடுவது போல் உள்ளது. முதல் பாதி வரை உரையாடல்களாகவே காட்சிகள் நகர்கின்றன. 2ம் பாதியில் முகமூடி ஆசாமிகள் கூத்து கலைஞ்ர்கள் என்ற சஸ்பென்ஸை உடைத்து அவர் கூத்து கட்டி ஆடும் ஆட்டத் தில் ஏகத்துக்கு நடிப்பு சரங்கள் உதிர்கின்றன.
அதுல்யா ரவி சந்தோஷின் மனைவியாக வருகிறார். அதிக வேலை இல்லை. தொடக்கம் முதல் இறுதிவரை கண்ணை கசக்கிக்கொண்டிருக்கிறார். காமெடியெல்லால் இந்த கதைக்கு ஒத்துவராது என்று விட்டு விட்டார்கள் போலிருக் கிறது.
முகமூடி அணிந்து கடைசி வரை முகத்தை காட்டமல் மடிந்துபோகும் அருண் ஆத்மா நெஞ்சில் பதிகிறார். அந்தகுண்டு நடிகர் கூத்து கட்டி ஆடும்போது பேஷ் போடவைக்கிறார். உதவி இயக்குனராக வருபவரும் வேட்டத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஹீரோ சந்தோஷ் பிரதாப்பை சேரில் கட்டி போடு விடுகிறார்கள். கடைசியாக கூத்து கலைஞர் கள் எடுக்கும் அதிர்ச்சி முடிவை சேரில் அமர்ந்தபடி யே கதறி அழுது தடுக்க முயலும்போது நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
ஸ்ரீதர் வெங்கடேசன் அழுத்த மாக ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். இசை பின்னணி இசை அந்த காலத் துக்கும் இந்த காலத்துக்கும் இடையில் ஊஞ்சலாட வைத் திருக்கிறது. மனோ ராஜா ஒளிப்பதிவு ஒகே.
’என் பெயர் ஆனந்தன்’ 42 சர்வதேச விருதுகள் வென்றுள்ளது. ரசிகர்களின் மனங்களையும் வெல்லும்.

Leave A Reply

Your email address will not be published.