படம்: என்ன சொல்ல போகிறாய்
நடிப்பு: அஸ்வின், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ்,
இசை: விவேக் மெர்வின்
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்
தயாரிப்பு: டிரைடண்ட் ஆர்ட்ஸ்
இயக்கம்: ஹரிஹரன்
எப் எம்மில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார் அஸ்வின். அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்யும் தந்தை, அஸ்வினுக்காக அவந்திகா மிஷ்ராவை பெண் பார்க்கிறார். அஸ்வினிடம் பேசும் அவந்திகா தனக்கு வரும் கணவன் காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறுகிறார்.அவந்திகாவை மணந்துகொள்ளும் எண்ணத்திலிருக்கும் அஸ்வின் தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்த தாக கூறுகிறார். அந்த காதலியை காட்டும்படி அவந்திகா கேட்க தடுமாறுகிறார். இந்நிலையில் தேஜு அஸ்வினியை தந்து காதலியாக நடிக்க கேட்கிறார் அஸ்வின். அவரும் தனது குடும்ப சூழலை எண்ணி காதலியாக நடிக்க சம்மதிக்கிறார். பொய்யாக உருவான இந்த காதல் ஜோடிகளுக் கிடையே நிஜ காதல் மலர்கிறது. இதனால் அஸ்வினுக்கு காதல் குழப்பம் ஏற்படுகி றது. அவந்திகா, தேஜு இருவரில் யாரை அஸ்வின் மணக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.
அஸ்வின் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம். அதை வீணாக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். காதல் காட்சிகளில் எதர்த்தமான நடிப்பில் கவர்கிறார். ஒன்றுக்கு இரண்டு காதலிகளாக அஸ்வினுக்கு அமைந்திருக்கின்றனர் அவந்திகா, தேஜு. இனிக்கும் கரும்பாக இவர்கள் காதல் அரட்டைகளும் இனிக்கின்றன.
ஹீரோயின்கள் அவந்திகா , தேஜு இருவரும் வேடத்துக்கு பொருந்தி இருக்கின்றனர். இருவரில் தேஜுக்கு வாய்ப்பு நிறைய என்பதால் ஸ்கோர் செய்கிறார்.
அஸ்வினுடன் இணைந்திருக்கும் புகழ் காமெடி செய்ய சேட்டைகள் செய்து சிரிக்க வைக்கப்பார்க்கிறார்.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. காதல் கதையில் சுவராஸ்யத்தை கலந்து படத்தை பொங்கலுக்கு இனிப்பாக வழங்கியி ருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன்.
ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. வண்ண மத்தாப்பு காட்சிகளாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.
விவேக் மெர்வின் இசையில் இளமை ஊஞ்சல்லாடுகிறது.
என்ன சொல்ல போகிறாய் – இளமை பொங்கல் விருந்து.