பேஷன்ஸ்டுடியோஸ் (Passion Studios) சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேக மாக வெளியாகிறது. படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுது போக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததும், இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக படமாக்கப் பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்பு திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிசபட்டு பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.
இந்நிகழ்வில் பேசிய நாயகன் கார்த்திக்
கூறியதாவது:
என்னுடைய முதல் படம் பீச்சாங்கை இந்தப் படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் நீங்கள் பெரிய ஆதரவு தந்துள்ளீர் கள் அதற்காக அனை வருக்கும் நன்றி
இயக்குநர் பிரபு ஜெயராம் கூறியதாவது:
கமர்ஷியலாக கதை சொல்ல நினைக்கும் இயக்குநரான ஒருவன், சீரியஸாக ஒரு கதை சொல்ல முயற்சிப்பதாக தான் இந்த திரைக் கதையை அமைத்தேன். இது 90 கிட்ஸ்களுக்கான படமாகத்தான் எடுத்திருக் கிறோம். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை, இடஒதுக்கீட்டில் தேவை உள்ளோர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இதை சொல்லியிருக் கிறோம். எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக லாம் என்பதை நான் வரவேற்கிறேன் அதைத் தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்தப்படத்தில் கதா பாத்திரங்களின் பின்னணியை தான் சொல்லியிருக்கிறேன். ரஞ்சித் தாசன் கதாபாத் திரம் என்பது, ஒரு அடிப்படை சமூகத்தில் இருந்து வந்து, கோபத் துடன் அவரது நியாயத்தை சொல்லும் பாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, ரஞ்சித் சார் பெயர் வைக்க லாம் என தோன்றியது அதைத்தவிர, மத்தபடி ரஞ்சித் சாருக்கும் இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்த முமில்லை. இந்தப்படத் திற்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் இதே கதைகருவில் தான் உருவாகியுள்ளது.
Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ள “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.
படத்துக்கு இசை குணா பாலசுப்ரமணியம். ஒளிப்பதிவுஅருண் கிருஷ்ணா . படத்தொகுப்பு
பிரகாஷ் கருணாநிதி. கலை இயக்கம் டிஜே. பாடல்கள் கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், எம் எஸ். முத்து, திவ்யா லக்ஷனா, ஸ்வேதா ராஜு. மேக்கப் தேஜா. ஒலிப்பதிவு கிருஷ்ணன் சுப்ரமணியம். பாடகர்கள் பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன்
dapping இன்ஞ்னியர் அருண் உமா. ஸ்டில்ஸ் ராம் பிரசாத். DI ஸ்ரீராம்.
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா, ரேகா D’One