“எண்ணி துணிக”  டப்பிங்  நிறைவு செய்த  ஜெய் !

2

நடிகர் ஜெய் அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில், வித்தியாசமான பாத்திரங்களில் தனித்துவம் கொண்ட படங்களை செய்து வருகிறார். அவரது திரை வரிசை ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டும்படி அமைந்துள்ளது. அவரது அடுத்த வரிசை திரைப்படங்களில் “எண்ணி துணிக” திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் முற்றிலும் புதுமையான பாத்திரத்தில், வித்தியாசமான வேடத்தை ஏற்றிருக்கிறார் நடிகர் ஜெய். புதிய லுக்கில் நடிகர் ஜெய் தோன்றும்
இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடிகர் ஜெய் இப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார். இப்படத்தின் , போஸ்ட் புரடக்சன் பணிகளின் பெரும் பகுதி முடிக்கப்பட்டுவிட்டது. Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் S.K.வெற்றிச் செல்வன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்ரமணியன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான டீசரில் தொழில் நுட்ப குழுவில் சாம் CS (இசை), J.B.தினேஷ் குமார் (ஒளிப்பதிவு), V.J.சாபு ஜோசப் (எடிட்டிங்), ஆகியோரின் பணிகள் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்தது. இந்த படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது. படத்தைத் தயாரித்ததோடு அல்லாமல் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருப்பதுடன் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் எண்ணி துணிக திரைப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.