ஈஸ்வரன் (பட விமர்சனம்)

96

நடிப்பு: சிம்பு. நிதி அகர்வால், பாரதிராஜா, மனோஜ், முனிஸ்காந்த், பாலா சரவணன்
தயாரிப்பு: பாலாஜி காபா
ஒளிப்பதிவு: திரு
இயக்கம்: சுசீந்திரன்

படத்தின் வெற்றி நல்ல கதை அதற்கேற்ற நடிகர்களை பொருத்தே அமைகிறது. அந்த வகையில் ஈஸ்வரன் படத் துக்கு இரண்டு அம்சமும் சரியாக அமைந்திருக்கிறது. கிராமத்தில் வாழுகிறார் விவசாயி பாரதிராஜா. தனி ஆளாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறார். அவர்கள் வளர்ந்ததும் சென்னையில் சென்று வாழ் கின்றனர். வருடத்துக்கு ஒருமுறை பிள்ளைகள் அனை வரும் வந்து அவரை பார்த்து விட்டு செல்வார்கள். இதற்கி டை யில் பாரதிராஜாவை கண்ணும் கருத்துமாக பார்த் துக்கொள்கிறார் இளைஞன் ஈஸ்வரன் (சிம்பு). பாரதிராஜா குடும்பத்தில் சோழி பிரசன்னம் பார்க்கும்போது உங்கள் குடும்பத்தில் ஒரு உயிர் பிரியப்போகிறது என்று ஒரு அதிர்ச்சியான விஷயத்தை ஜோதிடர் சொல்கிறார். அதிலிருந்து கதையில் திருப்பு முனை ஏற்படுகிறது. பாரதி ராஜா குடும்பத்தை ரத்ன சாமி பழிவாங்க நேரம் பார்த்து காய் நகர்த்துக்கிறார். இந்த நேரம் பார்த்து பாரதிராஜாவை பார்க்க ஊரிலிருந்து பிள்ளை கள், பேர பிள்ளைகள் வருகின் றனர். அவர்களையும் ரத்ன சாமி பழி வாங்க முயலும் போது அவர்களை ஈஸ்வரன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.

கிராமத்து பின்னணி கதை என்றால் சுசீந்திரனுக்கு கைவந்த கலை. இதில் பாரதிராஜா, சிம்பு தொடங்கி கடைசி பாத்திரம்வரை என்னனென்ன முக்கியத்துவம் தர வேண்டுமோ அவ்வளவை யும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். குடும்ப தலைவர் என்ற பொறுப்பை சுமந்து நிற்கும் பாரதிராஜாவுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை சுசீந்திரன் இந்த காட்சிககு இப்படியொரு அழுத்தம் வேண்டும் என்று கோடு போடடால் ரோடு போட்டுவிடுகிறார்.
இளமை துடிப்புடன் கூடிய ஈஸ்வரன் பாத்திரம் ஏற்று வெளுத்து கட்டியிருக்கிறார் சிம்பு. ஆக்‌ஷன், காதல், ஆக்ரோஷம், சோகம், கலகலபு என சகலமும் கலந்த பாத்திரத் தில் சிம்புவின் வித்தியாமான நடிப்பு கைதட்டல் பெறுகி றது. பழனிக்கு வரும் விஐபிக்களை கோயிலுக்கு அழைத்து செல்லும் சிம்பு நண்பர்களுடன் அரட்டை கச்சேரி நடித்தி கலகலக்க வைக்கிறார். குறிப்பாக அவர் பாரதிராஜா மீது காட்டும் பாசம் அவருக்ககாவும் அவர் குடுபத்தை காப்பாற்றவும் போராடும் ஆவேசம் எல்லாமே வேடத்தை தூக்கிப்  பிடிக்கிறது. இப்படியொரு சிம்புவை பார்த்து பல வருடம் ஆச்சு என்றளவுக்கு நடிப்பிலிம் நடையிலும் வேகம் காட்டுகிறார்.
பாடல் காட்சிகளில் நடனத் ல் பின்னிபெடலெடுத்திருக் கிறார் சிம்பு. சில இடங்களில் சிம்புவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறு கிறார் ஹீரோயின் நிதி அகர்வால்.
சண்டை காட்சிகளில் ஏற்கன வே அதிரடி காட்டும் சிம்பு இதில் கூடுதல் அதிரடி காட்டி அசரவைக்கிறார். சென்டி மென்ட் காட்சிகளிலும் மனதை தொடுகிறார். 2 வருட இடைவேளைக்கு பிறகு சிம்பு வின் ரீ என்ட்ரி சோடை போக வில்லை. நீ அழிக்க வந்த அசுரன்னா நான் காக்க வந்த ஈஸ்வரன் என்று பஞ்ச் வசனம் பேசி ரசிகர்களை குதுகலப்படுத்துகிறார்.
நிதி அகர்வால் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நந்திதா சுவேதாவும் குறிப்பிடத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சிம்புவின் நண்பராக வரும் பாலா சரவணன் வேடத்தை தக்க வைக்கிறார். பாரதிராஜாவின் இளவயது தோற்றத்தில் அவரது மகன் மனோஜ் நடித்துள்ளார். பாரதிராஜாவே மனோஜ் நடித்த படங்களை இயக்கி இருக்கிறார். ஆனாலும் இப்படத்தில் மனோஜ் நடிப்பை பார்த்து பாரதி ராஜா பெருமிதம் கொண்டதாக இப்படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்தார்.
வில்லன் வேடத்தில் ஸ்டன் சிவா நடித்திருக்கிறார், தோற்றமும், கதாப்பத்திரமும் கரடுமுரடு.  முனிஸகந்த்தும் தன் பிண்ணடி
சிம்புவுக்காகவே ஸ்பெஷல் கவனம் செலுத்தி இருக்கிறார் எஸ்.தமன். பாடலுக்கு பாடல் வித்தியாசமன இசையில் அசத்திவிடுகிறார். சிம்புவின் அறிமுக பாடல் தமிழன் பாட்டு படப்பிடிப்பும், நடனமும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். மாங்கல்யம் என்ற பாடலி சிம்பு பாடி இருக்கிறார். திருவின் ஒளிப் பதிவில் யாதார்த்தம் மிளிர் கிறது.
இவ்வளவையும் 28 நாட்களில் படமாக்கி முடித்திருக்கும் இயக்குனர் சுசீந்திரனுக்கு ஒரு கைதட்டல் கொடுக்கலாம்.
ஈஸ்வரன் – இது சிம்பு தரும் இனிப்பு பொங்கல்.

Leave A Reply

Your email address will not be published.