எட்டர்னல்ஸ் (திரைப்பட விமர்சனம்)

3

படம் : எடர்னல்ஸ்
நடிப்பு:ஜெம்மா சான், ரிச்சர்ட் மாட்டென், குமாலி நாஞ்ஜினி, லியா மெக்ஹக்., பிரைன் டயர் ஹென்றி, லாரென் ரிடிஆப், , பேரி கியோகஹன், டான் லீ, ஹரிஷ் படேல், சல்மா ஹாயெக், ஏஞ்சலினா ஜோலி,
இசை: ராமின் டிஜாவாடி
ஒளிப்பதிவு: பென் டேவிஸ்
இயக்கம்: சியோயி ஜஹாஒ
தயாரிப்பு: மார்வெல் ஸ்டுடியோஸ் கெவின் ஃப்யிஜி, நடே மோரே
ரிலீஸ்: வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

உலகையும், உலக உயிர்களையும் படைக்கும் கடவுளான ஆரிஷம் உலகில் மனிதர்களை கொல்லும் பயங்கரமான டேவியண்ட்ஸ் ராசத மிருகங்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே அவைகளை கொன்று மனித இனத்தை காப்பாதற்காக அதீத சக்தி வாய்ந்த 10 எட்டர்னல்களை அனுப்பி வைக்கிறார். பல நூறு ஆண்டுகள் ஆனபிறகும் எட்டர்னல்கள் பூமியிலேயே மக்களோடு தங்கி இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதில் சிலர் மனிதர்களை போல் திருமணம், குடும்பம், காதல் என்று வாழ்க்கை அமைத்துக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் உலகத்தை அழித்து புதிய உலகத்தை படைக்க ஆரிஷம் முடிவு செய்கிறார். இதில் பல கோடி மனிதர்கள் அழிவார்கள் என்று தெரிந்ததும் எட்டர்னல்களில் சிலர் உலக அழிவை தடுக்க முடிவு செய்கின்றனர். எட்டர்னல் களில் சக்தி வாய்ந்த ஒரு சூப்பர் மேன் மட்டும் இந்த முடிவை ஏற்காமல் எட்டர்னல்களையே கொல்ல துணிகிறார். இந்த போரில் வெல்வது யார் என்பது கிளைமாக்ஸ்.

மார்வெல் காமிக் கதைகளை பின்னணியாக கொண்டு 200 மில்லியன் டாலர் செலவில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சூப்பர்மேன் சக்தி கொண்டவர்களாக ஜெம்மா சான், ரிச்சர்ட் மாட்டென், குமாலி நாஞ்ஜினி, லியா மெக்ஹக்., பிரைன் டயர் ஹென்றி, லாரென் ரிடிஆப், , பேரி கியோகஹன், டான் லீ, ஏஞ் சலினா ஜோலி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
ஆக்‌ஷன் காட்சிகளில் இவர்கள் ஒவ்வொருவரும் காட்டும் அதிரடிகள் ஆச்சர்யமூட்டுகிறது. குறிப்பாக ரிச்சர்ட் மாட்டென் ஹீரோபோல் செயல்பட்டு திடீரென்று வில்லனாக மாறி எட்டர்னல் களையே கொல்லத் துணிவது படத்தை பரபரப்புக்கு இட்டுச் செல்கிறது.

ஏஞ்சலினா ஜோலியின் ஆக்‌ஷன் காட்சிகளும் வழக்கம்போல் அதிரடிதான்.

எட்டர்னலாக இருந்தாலும் மனித உணர்வுகளுக்குள் மூழ்கிவிடும் ஜெம்மா சான் தாய்மையின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

பிரமாண்ட இயக்கம், துல்லியாமான ஒளிப்பதிவு, அரங்கை அதிர வைக்கும் இசை என மூன்றும் சூப்பர்பவர் நடிகர், நடிகைகளின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

எட்டர்னல்ஸ் – அனைத்து வயதினரையும் கவரும் ஆக்‌ஷன் படைப்பு.

Leave A Reply

Your email address will not be published.