ரஜினியை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து குவியும் அஞ்சல் அட்டைகள்

ரசிகர்கள் புது யுக்தி..

16

இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினிகாந்த், ’நான் அரசியலுகு வந்து தனிக்கட்சி தொடங்கி எம்ஜிஆர் ஆட்சியை தருவேன்’ என்றார். அதைக்கேடு ரசிகர்கள் உற்சகம் அடைந்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவதற்கான பணிகளை கவனித்து வந்தார். ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.

சமீபத்தில் அவர் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலிலிருந்து விலகி நிற்பதுபோல் அறிவிப்பு வெளியிட்டர். இதை ரசிகர்கள் ஏற்கவில்லை.

ரஜினியை அரசியலுகு வரச் சொல்லி அவரது வீடு முன் திரண்டு கோஷமிட்டனர். தற்போது  ரஜினி வீட்டிற்கு அவர்களது ரசிகர்கள்  போஸ்ட் கார்டில் ரஜினியை அரசியலுக்கு வரும்படி கேட்டு அஞ்சல் அனுப்பி வருகின்றனர். அந்த அஞ்சல் அட்டைகள் அவரது வீட்டில் குவிந்து வருகிறது.

கடிதங்களில் ரசிகர்கள் உருக்கமாக வரிகள் எழுதப்பட்டுள்ளன.

 

ஏழை எளிய மக்களும் ஏற்றம் கண்டிட நீ வா தலைவா
நேர்மையானவர்கள் துணிச்சலாக அரசியலுக்கு வர, நீ வா தலைவா

மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தை கொண்டுவர உங்களை ஆண்டவன் அனுப்பி இருக்கான் வா தலைவா வா உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

 

மக்கள் மனதில் மன்னனாக வாழ்கிறாய்
இது தங்களுக்கு கிடைத்த அரிய வரம்
தாங்கள் அரசியலில் ஈடுபட்டால் மக்களுக்கு மாற்றம் வரும், இப்படி பலரும் பல வித கருத்துக்கள் தெரிவித்துக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.