90 படங்கள் தயாரித்த சூப்பர் குட் ஆர்.பி.சவுத்ரி..

கே.எஸ்.ரவிகுமார், எழில் வாழ்த்து..

63

விக்ரமன் இயக்கத்தில் புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நாட்டாமை சூர்யவம்சம், எழில் இயக்கத்தில் லவ் டுடே என பல வெற்றிப்படங்களை தயாரித்தளித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சுவுத்ரி. அவரது தயாரிப்பில் 90 வது படமாக உருவாகி இருக்கிறது களத்தில் சந்திப்போம். ஜீவா, அருள்நிதி இணைந்து நடித் திருக்கின்றனர். இப்படத்தை என்.ராஜசேகர் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் நேற்று திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
90 படங்கள் தயாரித்த ஆர்.பி. சவுத்ரிக்கு இன்று சென்னை யில் நடந்த பத்திரிகை மற்றும் மீடியாவுக்காக திரையிடப் பட்ட களத்தில் சந்திப்போம் சிறப்பு காட்சியில் பாராட்டு விழா நடந்தது.


இதில் இயக்குனர் கே.எஸ்.ரவி குமார் கலந்து கொண்டு சவுத்ரி காலை தொட்டு வணங்கி வாழ்த்தி பேசினார். அவர் கூறும்போது,’இன்றைக்கு நான் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக உங்கள் முன் இருக்கிறேனென்றால் அதற்கு காரணம் ஆர்.பி.சுவுத்ரி சார்தான், அவரிடம்தான் நான் தயாரிப்பு பற்றியும் கற்றுக் கொண்டேன், அவர் 60 க்கும் மேற்பட்ட இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்து இயக்குனர் களாக்கி இருக்கிறார். இன்றைக்கு களத்தில் சந்திப்போம் அவரது 90வது படமாக தயாராகி இருக்கிறது. விரைவில் 100 படங்கள் தயரித்துவிடுவார். அப்போது அவருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த உள்ளேன்’ என்றார்.
ஆர்.பி.சவுத்ரி பேசும் போது,’அந்த காலகட்டத்தில் பெரிய ஹீரோக்கள் வருடத் துக்கு மூன்று நான்கு படங்கள் நடித்தார்கள். இப்போது வருடத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறார். இதனால் பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பது எளிதானதல்ல என்றாகிவிட்டது. தற்போது 90 படம் முடிந்திருக்கிறது அடுத்து 4 படங்கள் தயாராகி வருகிறது. 100 படங்கள் தயாரிப்பது உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் நடக்கும்’ என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா, ஜித்தன் ரமேஷ் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண் டனர். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆஸ்தான பி ஆர் ஓ வாக பணியாற்றிய மவுனம் ரவிக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக் கப்பட்டது. அவரது உடல் நிலை விரைந்து குணம் அடைய வாழ்த்து கூறினார்கள். பி ஆர் ஓ டைமண்ட் பாபு சூப்பர் குட் பிலிம்ஸின் முதல் படத்துக்கு அவரது தந்தை பிலின் நியூஸ் ஆனந்தன் பி ஆர் ஓ வாக பணியாற்றினார். அதை நினைவுகூர்ந்து சவுத்ரிக்கு பொன்னாடை அணிவித்தார். தமிழ் சினிமா பத்திரிகையா ளர்கள் சங்கம் சார்பில் கவிதா மற்றும் நிர்வாகிகள் சவுத்ரிக்கு பொன்னாடை அணிவித்தனர். அனைவரையும் பி ஆர் ஒ ரியாஸ் அகமது வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.