திரைப்பட இயக்குனர் சி.ருத்ரைய்யா வாழ்க்கை..

19

திரைப்பட இயக்குனர் சி.ருத்ரைய்யா நினைவு தினம்  18 நவம்பர் 2014.  இவர் சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை, எழுத்து மற்றும் இயக்கம் படித்தார். 1978 ல் வெளியான இவரது முதல் படமான “அவள் அப்படித்தான்”, முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்த போதும், படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப் படுகிறது.

1980 ல் வெளியான “கிராமத்து அத்தியாயம்” என்னும் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாததால் அடுத்து பெரிய வாய்ப்பு எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.