சினிமா மீடியேட்டர் எஸ். ராமமூர்த்தி காலமானார்..

16

சினிமா மீடியேட்டர் எஸ்.ராமமூர்த்தி காலாமானார். இவர்தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நிறுவனங்களின் படங்களுக்கு மீடியட்டராக (வியாபாரத் தொடர்பு ) 50 ஆண்டுகள் பணியாற்றியவர் எஸ்.ராமமூர்த்தி.  வயது 89 நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் திருவேற்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் உடல் நலம் சரியில்லாமல் காலமானார்.
இவர் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ஏவிஎம் நிறுவனம் ராவுத்தர் பிலிம்ஸ் தேனாண்டாள் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்களின் படங்களுக்கும் டைரக்டர் வி.சேகர் விஜயகாந்த் சரத்குமார் கே.பாக்யராஜ் ஆர்.பார்த்திபன் ஆகியோரின் படங்களுக்கும் மீடியட்டராக பணியாற்றியவர்.
இவர் டைரக்டர் எஸ்பி. முத்துராமன், இராம நாராயணன் மற்றும் பல முன்னணி இயக்குனர்கள் நடிகர்களுக்கு நண்பராக இருந்தவர்
இவருக்கு கோதைநாயகி (காலமானார்) என்ற மனைவி .பத்மாவதி விஜயகுமாரி என்ற இரண்டு மகள்களும் வேலு மணி பாலாஜி என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் திருவேற்காட்டிலுள்ள கோலடி ஈடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.