ஃபில்டர் கோல்ட் (திரைப்பட விமர்சனம்)

6

படம்: ஃபில்டர் கோல்ட்

நடிப்பு:விஜய பாஸ்கர் டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவ இளங்கோ, நட்ராஜ், சாய் சதிஷ், வல்லவன்,செந்தில் நாயக்

இசை: ஹம்மர் எழிலன்

ஒளிப்பதிவு: எம்.பரணிகுமார்

தயாரிப்பு: ஆர்.எம்.நானு

இயக்கம்:விஜய பாஸ்கர்

 

திருநங்கைகள் பல படங்களில் கிண்டலும் கேலியுமாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள மன வலியும், உடல் வலிமையும், வாழ்க்கை முறையையும் ஒரு படமாக ஃபில்டர் கோல்டு படம் போல் வேறு யாரும் எடுத்து காட்டியதில்லை.

ரவுடித்தனத்தில் கைதேர்ந்த திருநங்கை விஜி. எந்நேரமும் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் புல்லட் வண்டியில் சுற்று கிறார். அவரது தோழிகள் டோரா, மற்றும் சாந்தி. கூலிப்படையாக செயல்படும் விஜி பணத்துக்காக கொலை செய்கிறார். இந்நிலையில் சாந்தி கொல்லப்படுகிறார். இதில் அதிர்ச்சி அடையும் விஜியின் தோழி டோராவின் வற்புறுத்தலால் சாந்தியை கொன்ற பையனை கொலை செய்கிறார்.அதை அறிந்து கோபம் அடையும் பையனின் தந்தை, விஜியின் தோழி டோராவை வேறொரு கூலிப்படை மூலம் வெட்டிச் சாய்க் கிறார். டோரா கொலை செய்யப் பட்டதை அறிந்த விஜி ஆவேசமுடன் வந்து டோரவை கொன்றவர்களை எப்படி பழி தீர்க்கிறார், அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

படத்தை இயக்கி இருப்பதுடன் விஜி என்ற ஹீரோ, வில்லத்தனம் நிறைந்த மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய் பாஸ்கர்.

தன்னை ஒன்பது என்று சொல்லும் போலீஸ்காரரை கோபத்தில் தாவி அடிக்கும் முதல் காட்சியிலேயே மிரள வைக்கிறார் விஜய பாஸ்கர். அடுத் தடுத்து அவரது அட்டகாசம் அதிகரித் துக்கொண்டே போகிறது.

திருநங்கைகளுக்கு யாரும் மரியாதை தருவதில்லை என்ற அவரது கோபம் பல இடங்களில் ஆவேசமாக வெளிப் படுகிறது.

டோராவாக நடித்திருக்கும் டோரா ஸ்ரீயின் காதல் கதை ஒரு பக்கம் சுவராஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அந்த காதலை கொச்சைபடுத்தாமல் படமாக்கி இருப்பதும் பாராட்டுக் குரியது.

சாந்தியாக நடித்திருக்கும் சுகுமார் சண்முகம் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் இருக்கிறார்.மற்ற பாத்திரங்களும் வேடங்களை செம்மையாக செய்து படத்துக்கு துணை நின்றிருக்கின்றனர்.

இயக்குனர் விஜயபாஸ்கரின் இந்த வித்தியாசமான முயற்சி பல புது கதைகளுக்கு வழி அமைத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எம் பரணிகுமார் கேமரா தெளிவான படப்பிடிப்பு காட்சிகளை பளிச்சென படரவிட்டிருக்கிறது. இசை அமைப்பாளர் ஹம்மர் எழிலன் பணியும் நிறைவு.

ஃபில்டர் கோல்ட் – மாறுபட்ட படைப்பு.

Leave A Reply

Your email address will not be published.