தமிழில் வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ்

2020ல் தமிழ் சினிமாவுக்கு வயது 104

16

தமிழில் வெளியான முதல்பேசும் படம்

காளிதாஸ் 1931 அக்டோ பர் 31ம் தேதி.

 

தமிழில் இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதற்கு ராஜபாட்டை போட்டு கைகொடுத்த முதல் படம் காளிதாஸ்.

இப்படத்தில் பழம்பெரும் நடிகை டி.பி.ராஜலட்சுமி தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்திரையுலகின் முதல் பேசும் திரைப்படமான
காளிதாஸ்
வெளியான தினம் இன்று ( 31 அக்டோபர் 1931 )

H.M.ரெட்டி இயக்கிய இத்திரைப்படத்தில் P.G.வெங்கடேசன் நாயகனாகவும், T.P.ராஜலட்சுமி நாயகியாகவும், பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் L.V.பிரசாத் பூசாரியாக நடித்திருந்தார். இப்படத்தை தயாரித்தவர் மும்பையைச் சேர்ந்த அன்றைய இந்திய மற்றும் பன்னாட்டு மொழிப்படங்களின் பிரபல தயாரிப்பாளர் இயக்குனர் Khan Bahadur Ardeshir Irani . இந்தியாவின் முதல் பேசும் ஹிந்தி திரைப்படமான Alam Ara ஐ இயக்கியதும் Khan Bahadur Ardeshir Irani ஆவார்.

இத்திரைப்படத்திற்கு ராமநாதபுரம் சமஸ்தான அரசரவைக்கவிஞரும், தமிழ்த்திரையுலகின் முதல் திரைப்பாடலாசிரியரும், கதை வசனகர்த்தாவும், கவிஞரும், எழுத்தாளரும், மதுரையில் முதன்முதலாக “தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம்” துவங்கியவரும், சுதந்திரப்போராட்ட தலைவருமான, மதுரகவி பாஸ்கரதாஸ் (வெள்ளைச்சாமித்தேவர்) அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்

தமிழகத்தில் வெளியான முதல் மவுன படம் கீச்சக வதம் – 1916.

Leave A Reply

Your email address will not be published.