கமல்ஹாசனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஃபோர்ட் பணியாளர்கள்

1

ஃபோர்ட் கார் நிறுவனம் மூடப்படுவதால் அங்கு பணியாற்றும் பணி்யாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவானது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குரல் கொடுத்தார். அதற்கு  ஃபோர்ட் பணியாளர்கள் அமைப்பினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், தனது உற்பத்திப் பிரிவை இந்தியாவில் சென்னையில் நிறுவி உற்பத்தி செய்துவந்தது. பின்னர் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் தொடங்கியது. அதன்மூலம் தமிழகத்திலும் குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.
இந்நிலையில், அந்நிறுவனம் தனது இந்திய யூனிட்டுகளை மூடுவதாக அறிவித்தது. பெரும் வேலை இழப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்’ கண்டித்துக் குரல்கொடுத்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், அந்நிறுவனப் பணியாளர்கள் கமல்ஹாசனை சந்தித்தனர். அவர்களிடம் கமல்ஹாசன், ஃபோர்டு நிறுவனத்தைத் தக்கவைக்க, தான் மேலும் முயல்வதாகக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.