காந்தி பட இயக்குனர் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோோ காலமான தினமின்று

2

மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் படமாக உருவாக்கி ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ இதே நாளில் காலமானார்

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டுவதற் காக, இங்கிலாந்தில் இருந்த தன்னுடைய சொந்த வீட்டை விற்றுச் செலவழித்த பென்னி குவிக்கைப் போலவே, மறைந்த ரிச்சர்ட் அட்டன்பரோ, லண்டனில் இருந்த தன்னுடைய சொந்த வீட்டை அடகு வைத்தும், தான் அரும் பாடுபட்டு சேகரித்து வைத்திருந்த அரிய கலைப் பொருள்களை யெல்லாம் விற்றும், அந்தத் தொகையிலிருந்து “காந்தி” திரைப் படத்தைத் தயாரித்தார் என்பது நம்மால் மறக்க முடியாத வரலாறு.

இதுவரை எந்த ஆங்கிலத் திரைப்படமும் பெற்றிராத அளவுக்கு எட்டு ஆஸ்கார் விருதுகளை, குறிப்பாக சிறந்த இயக்குனர் அட்டன்பரோ என்ற அளவுக்குப் பெற்ற திரைப்படம் “காந்தி”.

“காந்தி” திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு, அட்டன்பரோ பல திரைப் படங்களை இயக்கி, நடித்ததெல்லாம், “காந்தி” படத்தை இந்த அளவுக்குச் சிறப்பாகத் தயாரிப்பதற் கான பயிற்சியாக அமைந்தது என்று அவரே தெரிவிச்சிருக்கார்

Leave A Reply

Your email address will not be published.