ஜென்டில்மேன் 2 பட இசை அமைப்பளர் கீரவாணி

0

பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன்2 படத்திற்கு இசையமைக்கும் பிரமாண்ட இசையமைப்பாளர் எம் எம்.   கீரவாணி !

தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன் ‘ கே. டி..குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

#ஜென்டில்மேன்2 படத்திற்கு இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பானது.

இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று அறிவித்துள்ளார்கள்.

உலகமே கொண்டாடிய #பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் #M.M.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் இப்பொழுது, பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் S.S.ராஜ்மௌலியின் #RRR படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்த தங்க காசு போட்டியில் பல ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். சிலர் சரியான பதிலை பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் கோல்ட் காயின் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கபடும்.

இதையடுத்து, இப்படத்தின் டைரக்டர் யார் என்பதும் விரைவில் வெளியாகும்.

— johnson,pro.

Leave A Reply

Your email address will not be published.