ஜீ வி பிரகாஷ் நடிக்கும் “பேச்சிலர்” படத்தின் இசை விரைவில்..

14

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக்கூடிய வெற்றி படங்களாவும் அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது. ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இருந்து வருகிறது.

அப்படங்களில் முக்கியமானதொரு படைப்பு தான் “பேச்சிலர்”. ஜீ வி பிரகாஷ் நாயகனாக நடிக்க , இயக்குநர் சசியின் உதவியாளராக இருந்து இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகிறார் சதீஷ் செல்வகுமார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனமான Think Music நிறுவனம் பெற்றிருப்பதில் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு கூறியதாவது…

இது “பேச்சிலர்” படத்தின் மொத்த படக்குழுவிற்குமே மிகவும் உற்சாகமான தருணம். ஜீ வி பிரகாஷின் மாயாஜால இசை ஏற்கனவே கணக்கற்ற வகையில் ரசிக இதயங்களை கொள்ளையடித்துள்ளது. எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இது வெகு முக்கியமான, அற்புதமானதொரு ஆல்பம். தற்போது இசை உலகில் கோலோச்சும் Think Music நிறுவனம் இசை உரிமையை பெற்றிருப்பதால் “பேச்சிலர்” உலகம் முழுதும் உள்ள அனைத்து இசை ரசிகர்களையும் சென்றடையும் என்பது உறுதி. விரைவில் பாடல்கள் வெளியீடு பற்றிய அறிவிப்பை, டிரெய்லர் மற்றும் படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதியுடன் அறிவிக்க உள்ளோம்.

ஜீ வி பிரகாஷ் ஜோடியாக திவ்ய பாரதி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் பாகவதி பெருமாள், YouTube நக்கலைட்ஸ் புகழ் அருண் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.