முனுசாமி என்று இயற்பெயர் கொண்ட காமெடி ஆக்டர் செந்தில், தற்போதுவரை 280க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கார். இராமநாதபுரம், முதுகுளத்தூர் என்ற ஊரில் பிறந்த இஅவர். சின்ன வயதில் தன் அப்பா திட்டி அடித்த காரணத்தால் தன்னுடைய 12-ஆம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தாராம். இதன் பிறகு என்ன செய்வதறியாமல் தவித்த இவர் முதலில் எண்ணெய் ஆட்டும் நிலையத்திலும், பிறகு டாஸ்மாக் கடையிலும் பணிபுரிந்துள்ளார்.
இதன் பிறகு ஒரு நாடகத்தில் இணைந்து தன்னுடைய நடிப்பு திறமையை வளர்த்து கொண்டார். இதுவே அவருக்கு சினிமா துறையில் அடியெடுத்து வைக்க உதவியாக இருந்தது. திரைத்துறையில் முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 1983-இல் வெளியான ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தின் மூலம் திரைத்துறையினரை கவர்ந்தார். இதனை அடுத்து 14-ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு சென்ற இவரை பெற்றோர்கள் இன்பமுகத்துடன் வரவேற்பு தந்தாய்ங்க.
பின்னர் இவருக்கு 1984-ஆம் ஆண்டில் கலைச்செல்வி என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என இருமகன்கள் உள்ளனர்.
இவருடைய நடிப்பில் வெளியான 260க்கும் மேற்பட்ட படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பெரும்பான்மையான படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கார். .
இவரது ஹிட் அடித்த நகைச்சுவை வசனங்கள் சில :
• அந்த இன்னொன்னு தாண்ணே இது (கரகாட்டக்காரன்)
• நேர்மை எருமை கருமை
• பாட்றி என் ராசாத்தி
• டேய் அண்ணனுக்கு பொற வைடா அண்ணன் நன்றி உள்ளவரு
• டேய்! அண்ணன் சிகப்புடா – கோயில் காளை
• புலிக்குட்டி தம்பி பூனக்குட்டி, பூனக்குட்டி தம்பி புலிக்குட்டி
• இது மந்திரிச்சு விட்ட தாயத்து இல்ல, இது தான் சயனைடு சப்பி
• அய்யய்யய்யய்யோ, அறிவுக்கொளுந்துண்ணே நீங்க
• கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்! என்னண்ணே உடைச்சிட்டீங்க! (வைதேகி காத்திருந்தாள்)
• ஸ்பேனர் புடிச்சவன் எல்லாம் மெக்கானிக்குன்னு சொல்றான் (சேரன் பாண்டியன்)
• அண்ணே! ஆத்தா பல்லு ஏண்ணே அப்படி இருக்கு! (சின்ன கவுண்டர்)
லாரி கிளீனராக மண்ண தொட்டு கும்பிடனும் படத்தில் ரேடியேட்டரில் தண்ணி ஊற்றி நான் ஒரு அனாதை னு கவுண்டரிடம் சொல்லுமிடம் மற்றும் பாய்ஸ் படத்தில் இன்பர்மஷன் இஸ் வெல்த் னு சொல்ற இடமும் இவர் நடிப்பிற்கு சான்று.
தற்போது நடிகர்கள் கவுண்டமணி – செந்தில் ஆகியோர் நடிக்காவிட்டாலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்சப், டிவிட்டர் போன்றவைகளில் இவர்களின் காமெடி மீம்ஸ்களே நிறைந்து காணப்படுகிறது. அப்படி சாதனைப் படைத்த செந்திலுக்கு நம் Filmnews24x7 சார்பில் ஹேப்பி பர்த் டே சொல்லிக் கொள்கிறோம்