அஜித் மற்றும் ஷாலினியின் திருமண நாள்!

1

நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் 22 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் வரையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இன்னிக்கு. சரியாக 22 வருஷங்களுக்கு முன்னால் இதே நாளில் இந்த ஜோடி திருமணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக மணவறையில் நின்றபோது வாழ்த்தாத உள்ளங்கள் இல்லை. நட்ஃபிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்று பெரிய நட்சத்திர பட்டாளங்களே வந்து வாழ்த்தினர். அரசியல் வட்டாரத்தில் பெரும் தலைவர்களாக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி என பாரபட்சம் காட்டாமல் இவரது கல்யாணத்தில் கலந்துக்கிடாங்க.

‘அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பு சைதாப்பேட்டை ஸ்ரீனிவாசா தியேட்டரில் நடைபெற்றக் காலம். ‘காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா..கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா’பாடலின் காட்சிகளின் வேகமாக படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தாய்ங்க. ராகவா லாரன்ஸுக்கு தனித்த அடையாளத்தை உண்டாக்கிக் கொடுத்தப் பாடல். இந்தப் பாடல் காட்சிக்குப் பின்னால் ஒரு நிஜக் காதல் நின்றுக் கொண்டிருந்தது. ஆம்! ‘அமர்க்களம்’அஜித்திற்கும் நடிகை ஷாலினிக்கும் லேசான நிஜக் காதல் மலர தொடங்கி இருந்துச்சு.

அதை ஸ்மெல் பண்ணி டோட்டல் யூனிட்டே அந்தக் காதலின் கெளரவத்தை பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். தியேட்டரில் உருவான காதல் லேசாக கசிந்து பத்திரிகை பக்கம் பாய ஆரம்பித்துவிட்டது. அஜித்திற்கும் ஷாலினிக்கும் காதல் கன்ஃபார்ம் என தலைப்புப் போட்டு விஷயத்தை பரப்பினார்கள். ஆனால் மிக அமைதியாக இருந்தார் அஜித். ஷாலினி தரப்பில் இருந்தும் பெரிய எதிர்வினைகள் இல்லை.

அதே சமயம் ஜென்டில் மேன் அஜித் தன்னுடைய காதலை நேராக ஷாலினியிடமே சொன்னார். ஷாலினி பக்கத்தில் பயங்கர அமைதி. அதே சமயம் அதிக எதிர்ப்பு இல்லை. பொதுவாக பெண்கள் மீது அதிக மரியாதை வைத்தவர் அஜித். பெண்கள் பாதுக்காப்பு பற்றியும் அவர்களின் வேலைகள் மீது நாம் செலுத்த வேண்டிய அன்பு குறித்தும் அவர் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார். அந்த அன்புதான் அஜித்தின் காதலுக்கு அச்சாணியானது என்றால் அது அஃமார்க் உண்மை. அந்த அன்பு உருவான மொமெண்ட் பற்றி ஷாலினியே தந்த தகவல் இது.

“முதல் அறிமுகம் ‘அமர்க்களம்’ படத்தின்போதுதான் ஏற்பட்டது. ஆக்ரோஷமாக ‘ஏய்ய்ய்..’ என கத்திக் கொண்டு கத்தியை தூக்கி எறிவார் அஜித். அந்தக் கத்தி லேசாக திசை மாறி என் கையில் பட்டுடுச்சுது. அடுத்த செகண்ட் ஆடிப்போய்விட்டார் அஜித். ‘கட்..கட்..கட்’ அப்படீன்னு அவரே டைரக்டரா ஆகி ஒரே காட்டுக் கத்தல். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டுச்சு. அஜித்தின் ஆர்ப்பாட்டத்தால் மினி ஹாஸ்பிட்டலே ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கு வந்து குவிந்து போச்சுது மற்றவர்களுக்கு ஒரு ஆபத்துனா இப்படி துடித்துடித்து போறாரே என்று மனதிற்குள் பட்டது. அங்கே ஆரம்பித்தது அவர் மீதான ப்ரியம்” அப்படீன்னார் ஷாலினி.

இதனால் அஜித் தன்னை திருமணம் பண்ணிக் கொள்ள விரும்புவதாக சொன்ன போது ஷானிலிக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் அதற்கு முன்பே அதனை புரிந்து கொண்டிருந்தார். ‘வீட்டில் வந்து அப்பாகிட்ட பேசுங்க’ என அவர் சொன்னதும் அஜித் முகத்தில் ஆயிரம் வெளிச்சம். அவர் எதை விரும்பினாரோ அது அவர் கைக்கு கிடைக்கப்போகிறது. மகிழ்ச்சி வராமல் இருக்குமா என்ன?

அஜித்-ஷாலினி ஜோடி பற்றி காதல் செய்திகள் காதை எட்டிய போதே பலரும் அதற்கு பச்சைக் கொடிக் காட்ட ஆரம்பிச்சிருந் தாய்ங்க . மிக அழகான ஜோடி என அவர்களை புகழ ஆரம்பிச்சிருந்தாய்ங்க. ஆச்சரியமூட்டும் விதத்தில் எதிர்மறை விமர்சனங்கள் கொஞ்சமும் இல்லை. எப்போது இந்த ஜோடி சேரும் என கனவுக் கண்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பாசிடிவ் வைப்ரேஷன் தான் அஜித்தின் ஆகச்சிறந்த பலம். அதை அவர் உடன் இருபவர்களிடம் ஒட்ட வைத்துவிடுவார். எப்போதும் எதிர்மறை எண்ணம் இல்லாதவர் அவர். அடுத்த நொடியும் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் என தீர்க்கமாக நம்பக்கூடியவர் அவர். அதே பாசிடிவ் வைப்ரேஷனுடன் இன்னொருவர் அவர் கூட இணைந்தால்? ஆயிரம் குதிரை பலம் கூடிவிடும் இல்லையா?

திருமணத்திற்கு முன் அஜித் அதிகமாக புகைப்பிடிப்பார். அவர் உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சர்யம் எனக் கூறும் அளவுக்கு எரிந்துக் கொடிருக்கும் புகை. அதை தனக்குப் பகை என்றார் ஷாலினி. அன்று விட்டவர்தான். இன்று வரை சிகரெட்டை அவர் தொடவே இல்லை. அவருக்கு முதல் காதலி பைக். அடுத்தக் காதலி ஷாலினி. இதை அவரே பல முறை சொல்லி இருக்கிறார். சோழவரம் பைக் ரேசில் அவர் கலந்து கொண்ட போது மிகப்பெரிய ஆக்சிடெண்ட் நடந்தது. அவர் முதுகெலும்பில் பயங்கர அடி. கீழே விழுந்ததில் பல எலும்புகள் சில்லி சில்லியாக சிதறிப்போயின. அதன் பின் அவர் மீண்டு வருவாரா? என பலரும் பயந்தனர். ஆனால் பாசிடிவ் பாய் சும்மா இருப்பாரா? மருத்துவர்கள் உடைந்த எலும்புத்துண்டுகளை கையில் கொண்டு வந்துக் காட்டிய போது அதை வாங்கி முத்தமிட்டார் அஜித். அதை அப்படியே கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தி கொண்டார். அதை தினமும் பார்த்து ‘ஐ யாம் கம் பேக்’ என மந்திரம் படிச்சார். அந்த உத்வேகம் தான் அவர் உயிரை மீட்டுக் கொண்டு வந்தது. அந்த விபத்தை பற்றி ஷாலினி பேசும் போது ‘அதைபோல கொடுமை யாருக்கும் வரக்கூடாது’ என்பார். அந்தளவுக்கு பதட்டம் அவர் வார்த்தைகளில் தெரிந்தது.

வேலை விஷயமாக அஜித் வெளியூர் போக நேர்ந்தால் நொடிக்கு நொடி போன் செய்து வீட்டு நிலவரங்களை விசாரிப்பது அஜித் ஸ்டைல். அதோடு அவர் ரிசிவரை வைக்கும் முன்பு இன்னொன்றை கட்டாயம் கூறுவார். அது அன்பு மனைவிக்கு ‘ஐ லவ் யூ’. தன் வாழ்க்கையில் தடைகளை உடைத்து தைரிய பிறவியாக உருவெடுத்த அஜித்தின் பக்க பலம்தான் ஷாலினி. அவரை பிரித்துவிட்டு அஜித்தின் வளர்ச்சியை பேச முடியாது. இவரை திருமணம் செய்த பின்தான் அஜித்தின் புகழ் உச்சத்தை எட்டியது.

இன்று இந்த ஆதர்ச தம்பதிக்கு திருமண நாள்.

அதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.