எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க விரும்புகிறேன் – ஆனந்தி

46

ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள ‘கமலி பிரம் நடுக்காவேரி’ படம் இம்மாதம் 19ம் தேதி திரைக்கு வருகிறது. பிரதாப் போத்தன், கார்த்திக் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீஜா நடித்துள்ளனர்.

தனது திருமணத்திற்கு பிறகு வெளியாகும் இப்படம் குறித்து ஆனந்தி கூறுகையில்:

ஐஐடியில் படித்து முன்னேற நினைக்கும் கிராமத்துப் பெண் பற்றிய கதை. சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் என் திருமணம் நடந்தது. கணவர் சாக்ரட்டீஸ் நீண்டநாள் குடும்ப நண்பர். மரைன் எஞ்சினியரிங் ஆக இருக்கிறார். விரைவில் சினிமா இயக்குனர் ஆகிறார். தொடர்ந்து நடிக்க அனுமதித்துள்ளார்.

தற்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் சோஷியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. திருமணத்திற்குப் பிறகு மேலும் பாதுகாப்பாக இருப்பது இருப்பது போல் உணர்கிறேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. இனிமேலும் அப்படி நடிக்க மாட்டேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.