“லைவ் டெலிகாஸ்ட்” தொடருக்காக பல நாட்கள் தூக்கத்தை தொலைத்தேன் – காஜல் அகர்வால்

44

வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரீஸில் பேய் வேடத்தில் நடித்தது குறித்து காஜல் அகர்வால் கூறுகையில் :

யாரும் இல்லாத பழைய பங்களாவில் டிவி தொடர் ஷூட்டிங் நடக்கிறது. அப்போது அங்கு பணியாற்றுபவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவம் தான் கதை. இதற்காக மலை உச்சியில் இருந்த வீட்டை தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தினர். அந்த இடம் என்னை பயமுறுத்துவதாக இருந்தது. சில நேரங்களில் நள்ளிரவு கடந்த பிறகும் சூட்டிங் நடக்கும். எனவே, நான் நடிக்கும் திகில் காட்சிகள் நிஜத்தில் நடப்பது போல் தோன்றும். ஷூட்டிங் முடிந்து ஓட்டலுக்கு வந்த பிறகும் அந்த வீட்டில் இருப்பது போன்றே உணர்ந்தேன்.

படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது போன்ற பிரம்மை என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தது. மும்பையில் உள்ள என் வீட்டிற்கு திரும்பிய பிறகு கூட ஷூட்டிங் பங்களாவில் இருப்பது போலவே தோன்றியது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் திகில் படத்தில் நடித்த அச்சத்தினால் என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை. இந்த தொடருக்காக பல நாட்கள் இரவு தூக்கத்தை தொலைத்தேன். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குலை நடுக்கமாக உள்ளது. தொடரைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் இந்த பயம் வரும் என்றார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.