படம் : க்
நடிப்பு: யோகேஷ், குருசம்பத்குமார், அனிகா விக்ரமன், ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் நரேன்
இசை: கவாஸ்கர் அவினாஷ்
ஒளிப்பதிவு: ராதாகிருஷ்ணன்
தயாரிப்பு: தரம்ராஜ்பிலிம்ஸ்
இயக்கம்: பாபு தமிழ்
கால்பந்தட்ட வீரர் வசந்துக்கு விளையாட்டின்போது சிறு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ஆகிறார். அதன்பிறகு அவர் வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கிறது. கொலை சம்பவம் ஒன்றை பார்த்து போலீசில் புகார் செய்கிறார். ஆனால் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று போலீஸ் கூறுகிறது, கற்பனையில் பல்வேறு சம்பவங்கள் வசந்துக்கு வந்து செல்கிறது. இதற்கு காரணம் என்ன? அவர் காண்பதெல்லாம் நிஜமா? கற்பனையா? என்ற குழப்பத்தில் தடுமாறுகிறார். அதற்கு பல வழிகளில் அவர் விடைதேடுகிறார். அதில் அவருக்கு தெளிவு கிடைத்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
கால்பந்தாட்ட வீரருக்கான கட்டுமஸ்த் தான தோற்றத்தில் இருக்கும் யோகேஷ் வசந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக் கிறார். அவரது பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதமே மிகவும் சிக்கலானது அதை புரிந்து கொண்டு நடித்திருப்பது சவால்தான்.
ஜன்னல் வழியாக கொலை சம்பவத்தை பார்ப்பது, தனக்கு வாழ்க்கையின் தெளிவை உணர்த்த மனநல மருத்துவராக தோன்றும் ஒய் ஜி மகேந்திரனின் ஆலோசனை உள்வாங்குவது, கார் டிரைவர் குரு சம்பத்குமாரோ தன் மனதுக்குள் குரூரத்தை வைத்துக்கொண்டு வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம் ஹீரோவை பல கதைகளையும் சம்பவங்களையும் சொல்லி அவரை மென்ட்டலாக மாற்ற முயற்சிப்பது என பல காட்சிகள் கதையை கிளைமாக்ஸை நோக்கி டென்ஷனாக நகர்த்தி செல்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் அனிகா சேலையில் அழகு தேவதையாகவும், மார்டன் உடையில் கிக் ஏற்றும் சூப்பர் பிகராகவும் வலம் வருகிறார்.
போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன் நடிப்பை அளந்து நடித்திருக்கிறார். கோபப்படும்போது கோபமும், அமைதி யாக காக்க வேண்டிய நேரத்தில் அமைதியும் காத்து கவர்கிறார்.
இயக்குனர் பாபு தமிழ் புதுமையான விதத்தில் கதை சொல்ல முயன்றிருக்கி றார்.
இசையும் ஒளிப்பதிவும் தேவையை மீறவில்லை.
”க்” – ஒரு வகை உளவியல் கதை.