இளையராஜா உடன் இணையும் இயக்குநர் சுசி கணேசன்..

0

4 வி எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘வஞ்சம் தீர்த்தாயடா’.

இந்தப் படத்தை 80 களில் மதுரையில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக் குகிறார் சுசி கணேசன்.

இந்தப் படத்துக்கு இசை மாமேதை இளையராஜா இசையமைக்கிறார். இதற்கான ஒப்பந்தம் இன்று உறுதி செய்யப் பட்டது. இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து முன் பணம் வழங்கி மரியாதை செய்தார் .

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன கூறிய தாவது :

கிராமத்து வாழ்க்கையில் ஊரணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா சாரின் இசையையும் ஒரு ஒரு உணவாக உண்டு வாளர்ந்தவன் என்ற முறையில் எனது ” வஞ்சம் தீர்த்தாயடா ” படத்திற்கு அவர் இசையமைப்பதை பெருமையாக எண்ணுகிறேன்.

என்னுடைய முதல் படத் துக்கு இளையராஜா சார் இசை அமைக்க வேண்டும் என்றிருந்த கனவு நான் முதன் முதலாக தயாரிக்கும் படத்தில் நிறைவேறி உள்ளது.

80 களில் நடக்கும் இந்த கதையில் இளையராஜா சார் இசை ‘படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திர மாக ‘இருக்கும்.

ஒரு இசை மாமேதையுடன் இந்த புத்தாண்டில் இணைந்து பணியாற் றுவது மாபெரும் கொடுப் பினை ” என்றார்.

அனைவருக்கும் இனிய பொங்கள் வாழ்த்துகள்.

Priya
PRO

Leave A Reply

Your email address will not be published.