தமிழக சட்டப்பேரவையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

6

தேனினும் இனிமையான குரலால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த பிரபல திரைப்பட பாடகரும் நடிகரும் எஸ்.பி.பி. என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 16-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள், மத்திய அரசின் பத்மஸ்ரீ,  பத்மபூஷன், போன்ற விருதுகளையும் பெற்றவர். இந்த ஆண்டின் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

இவ்வாறு இரங்கல் தீர்மானங்களை பேரவைத் தலைவர் வாசித்தார்.

தீர்மானத்தை நிறைவேற்றும் விதமாக உறுப்பினர்கள் சிறிது நேரம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.