ஜென்டில்மேன்2 படத்தில் நாயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக அறிமுகம்.!

0

மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2 ‘ இவர் தனது ஜென்டில்மேன், காதலன் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். தற்போது ‘ ஜென்டில்மேன்2 ‘ என்ற பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக திரை உலகிலும் சமூக வலை தளங்களிலும் இப்படத்தின் கதநாயகி யார்..! நயன்தாராவா? என்று கேள்வி குறியுடன் சர்ச்சைகள் பரவலாக இருந்தது .

தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து ஹீரோயின் பெயரை அறிவித்து உள்ளார் குஞ்சுமோன். சூப்பர் ஸ்டார்களான ரஜனி, மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் முப்பதுக்கும் அதிகமான மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்தி ( இது இவரது சொந்த பெயர் ) தான் அந்த அறிமுக கதாநாயகி. இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளதாகவும் அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன். அது யார் என்று ஆவலோடு காத்திருக்கிறது திரை உலகமும் ரசிகர்களும். மேலும் படத்தின் இயக்குனர், ஹீரோ, மற்றும் தொழி்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவரும்.

Leave A Reply

Your email address will not be published.