இரண்டாம் குத்து (பட விமர்சனம்)

16
படம்: இரண்டம் குத்து
நடிப்பு: சந்தோஷ் பி ஜெயக் குமார். டேனி, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, கரிஷ்மா. கவுல்
ஒளிப்பதிவு: பல்லு
இசை : பிரசாத்.
இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்
இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகமாக வந்திருக்கிறது இரண்டம் குத்து. சந்தோஷும், டேனி இருவரும் சின்ன வயது நண்பர்கள். எங்குபோனால் ஜோடியாக சுற்றி அரட்டை அடிப்பார்கள். அவர்களை பார்ப்பவர்கள் இர்வரும் ஹோசெக்ஸ் பேர்விழிகள் அதாவது ஓரினச் சேர்க்கையாளர்கள் என நக்கலடிக்கின்றனர்.  கிண்டல் செய்கின்றனர். அதைக்கேட்டு அவமானம அடியும் அவர்கள் நாங்கள் அப்படிப்பட்டவர்கள்  என்று சொல்வதுடன்
புது ஜோடியகள் ஜாலியாக இருக்க தேனிலவு பயணம்,ஆக தாய்லாந்து செல்கின்றனர். அங்கே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுக்கிறார்கள். அது ஒரு  பேய் வீடு.
இஷ்டப்பட்டதை அடைய முடியாமல் இறந்துபோய் அவியக சுற்றித்திரிகிறது.
பிறகு சந்தோஷையும் டேனியையும் பேய் மிரட்டுகிறது. இருவரும் என்னுடன் உறவு கொள்ளவேண்டும் அப்படி உறவு கொண்டால் இருவரும் செத்துவிடுவீர்கள் என்றும் அதைக்கேட்டு நடுங்கிப்போகும் இருவரும் அந்த பேயிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
இரண்டாம் குத்து படக்குழு
 சந்தோஷ் ஹீரோ மற்றும் இயக்குனர். கடந்த படத்தை அதாவது இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இவர் இயக்கினார். அது அடல்ட் படம் கவுதம் கார்த்திக் நடித்திருந்தார். இம்முறை அவர் எஸ்கேப் ஆகிவிட சந்தோஷே ஹீரோவாகிவிட்டார்.  ஹீரோ, இயக்குனர் என இரண்டு வேலை ஒன்றாக பார்த்ததால் நடிப்பில் சற்று தள்ளாடியிருக்கிறார். ஆனால் உடற்கட்டை கேமராவுக்கு ஏற்ப சிக்ஸ்பேக் வைத்து அடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க தயார் என்பதுபோல் உசரமாக நிற்கிறார்.
படத்தின் டைட்டிலே கவர்ச்சியாக இருக்கிறது, பிறகு இரண்டு ஹீரோயின்களை வைத்து என்ன செய்ய போகிறார்கள் கவர்ச்சி கவர்ச்சி என கவர்ச்சியில் ரசிகர்களை முக்கி எடுக்கிறார்கள் போதாததுக்கு பேயையும் கவர்ச்சியாகவே காட்டுகிறர்கள்.
சந்தோஷும்  டேனியையும் சேர்ந்து ஏ ஜோக் அடிக்கிறார்கள்.  ரவி மரியா, சாம்ஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் காமெடி செய்கிறார்கள்.
பாடல்கள் பரவாயில்லை ரகம்.  இப்படத்தின் முன்றாம் குத்து அதாவது 3வது பாகமும் வரப்போகுதாம்.
‘இரண்டாம் குத்து’ கிளாமர் ஓவர் டோஸ்.

Leave A Reply

Your email address will not be published.