நடிகை மேக்னா ராஜ். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாளம் கன்னட படங்களிலும் நடித்தார். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார்.
முன்னணி நடிகர்களில் ஒருவ ராக வலம் வந்துக் கொண்டி ருந்த சிரஞ்சீவி சார்ஜா திடீரென்று கடந்த ஜூன் மாதம் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 39 மட்டுமே ஆகி இருந்தது. அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிரஞ்சீவி சார்ஜா இறந்தபோது மனைவி மேக்னாராஜ் கர்ப்ப மாக இருந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன் அவருக்கு வளை காப்பு விழா நடந்தது. மறைந்த கணவர் சிரஞ்சீவி யின் கட் அவுட்டை தனது அருகில் நிற்க வைத்தபடி வளைகாப்பு விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் மேக்னாவுக்கு இன்று அழகான ஆண்குழந்தை பிறந்தது.
சிரஞ்சீவி மற்றும் துருவாவின் உறவினர் சூரஜ் சர்ஜா ஒரு உணர்ச்சிபூர் வமான இன்ஸ்டா கிராம் மெசேஜில்,’ஆண் குழந்தை மறைந்த நடிகரின் மறுபிறவி. சிருவை அன்போடு எங்கள் குடும்பம் வரவேற்கிறது. உங்கள் பிரார்த் தனைக்கும் ஆதரவிற்கும் நன்றி’ என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சிரஞ்சீவி சர்ஜா வின் சகோதரர், கன்னட நடிகர் துருவா சர்ஜா, தனது இன்ஸ்டா கிராமில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார், “ஆண் குழந்தை … ஜெய் அனுமன்.” துருவா சர்ஜாவின் மனைவி பிரேரானா ஷங்கரும் இன்ஸ் டாகிராமில் இந்த செய்தியை பகிர்ந்துகொண்டு எழுதினார்: “மேகனாவும் சிருவும் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப் பட்டனர். உங்கள் பிரார்த்தனைக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்றார்.