ஜகமே தந்திரம் பட விமர்சனம்

5

படம்: ஜகமே தந்திரம்
நடிப்பு: தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், சவுந்தரரஜன்,
தீபக் பரமேஷ், ஷரத் ரவி, தேவன், வடிவுக்கரசி, ராமசந்திரன் தன்ராஜ்,
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
தயாரிப்பு: சசிகாந்த், சக்ர்வர்த்தி, ராமசந்திரா
இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்
ரிலீஸ்: நெட்பிளிக்ஸ் ஒ டி டி தளம்

மதுரையில் பரோட்டா கடை நடத்தும் தனுஷ் அடிதடிகளில் ஈடுபடுகிறார். ஒரு கொலை செய்துவிட்டு கவலையில்லாமல் சுற்றும் தனுஷை போலீசிடமிருந்து காப்பாற்ற முயலும் அவரது நண்பர்கள் தலைமறைவாக இருக்க கேட்கின்றனர். அந்த நேரம் பார்த்து கோடிகளில் சம்பளம் தருகிறோம் லண்டனில் வந்து வெள்ளைக்கார தாதாவிடம் அவருக்கு தேவையானவற்றை செய்துகொடுக்க கேட்கின்றனர். அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால் லண்டன் புறப்பட்டு செல்கிறார். அங்கு வெள்ளைக் கார தாதாவுக்கு வேலை பார்த்து அவரது எதிரி சிவதாசை தந்திரமாக சிக்க வைத்து கொல்ல வைக்கிறார். மேலோட்டமாக சிவதாஸ் குற்றவாளி என்றாலும் லண்டன் சிறையில் இருக்கும் இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று தனது பணத்தை செலவழித்து சட்டப் போராட்டம் நடத்துகிறார். அவரை தந்திரமாக தனுஷ் கொன்றதால் கோபம் அடையும் ஐஸ்வர்யா லட்சுமி தனுஷை கொல்ல முயல்கிறார். அதைக் கண்டு பிடிக்கும் தனுஷ் தன்னை கொல்ல முயல்வது ஏன் என்று கேட்க, சிவதாஸ்பற்றி ஐஸ்வர்யா லட்சுமி சொல்கிறார். மனம் வருந்தும் தனுஷ் தானே லண்டன் சிறையிலிருக்கும் ஈழ தமிழர்களை விடுவிப்பதாக உறுதி தருகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
சுருளி என்ற கதாபாத்திரத்தில் லோக்கல் ரவுடியாக கெத்து காட்டி சுற்றி வருகிறார் தனுஷ். ரயிலை நடுவழியில் நிறுத்தி அதில் ஏறி கொல்லும் அசால்ட்டான நடிப்பு செம கிழி.
லண்டன் சென்றதும் வெள்ளைக்கார தாதா ஜேம்ஸ் காஸ்மோவிடம் ரவுடியாகவே சேரும் தனுஷ் சர்வ சாதரணமாக எதிரி சிவதாஸின் குற்ற நடவடிக்கைகளை தனுஷ் காட்டிக்கொடுப்பதும் ஒரு கட்டத்தில் சிவதாஸிடம் அவருக்கு சாதகமாக பணியாற்றுவதுபோல் நடித்து அவரையே வெள்ளைக்கார தாதா கையால் கொல்ல வைப்பதும் எதிர்பாராத ஷாக்.
ஐஸ்வர்யா லட்சுமி வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தமிழ் என்றால் தமிழ்நாடுதானா என்று அவர் தனுஷிடம் பொடிவைத்து கேட்கும்போது இது இலங்கை தமிழர் கதையாக நகரப் போகிறது என்பதை யூகிக்க முடிய வில்லை.
சிவதாஸாக வரும் ஜோஜு ஜார்ஜ் அமைதியாக நடித்தே தாதா ரோலை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். வடிவுக்கரசி, கலையரசன், ஷ்ரத் ரவி பங்கும் ஒகே.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு சீன்களுக்கு ஏற்ப கலர் டோன்களை மாற்றி அந்த மூடுக்கு ரசிகர்களை உள்ளிழுத்திருக் கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஏற்கனவே பாப்புலர். அதுவும் ரகிட ரகிட பாடல் ஏ ஒன் ரகம்.
கார்த்திக் சுப்புராஜ் சர்ச்சையான கதையை கையாண்டு மீண்டிருக்கிறார்.
ஜகமே தந்திரம்- மதுரை டு லண்டன் கேங் ஸ்டர் ஸ்டோரி.

Leave A Reply

Your email address will not be published.