ஜெயில் (திரைப்பட விமர்சனம்)

3

படம்: ஜெயில்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், புதுமுகம் நந்தன் ராம், பசங்க பாண்டி, ராதிகா, அபர்நதி, பி.டி.செல்வகுமார்

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

தயாரிப்பு: ஸ்ரீதரன் மாரிதாசன்

இயக்கம்: ஜி.வசந்த பாலன்

காவேரிநகர் பகுதியில் வாழும் கர்ணன், ராக்கி, மாணிக் கோஷ்டி எதிரும் புதிருமாக மோதிக்கொள்கிறது. ராக்கியை மாணிக் குரூப் கொலை செய்கிறது. நண்பனை கொன்ற மாணிக்கை பழிவாங்க கர்ணன் களமிறங்குகிறான். அவனுக்கு சாதகமான சூழல் அமையாமல் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் அப்பகுதி இன்ஸ்பெக்டருக்கும் கர்ணனுக்கும் மோதல் ஏற்படுகிறது. போதை பொருள் விவகாரத்தில் இன்ஸ்பெக்டரை போதை தடுப்பு அதிகாரிகளிடம் மாட்டி விடுகிறான் கர்ணன். அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

நகரத்து இளைஞராக பல படங்களில் ஜிவி பிரகாஷை பார்த்து பழகிய நிலையில் அழுக்கு சட்டை, டவுசர், செம்பட்டை முடி என சேரி பகுதி இளைஞன் கர்ணன் என்ற பாத்திரத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். நடிப்பிலும் காட்சிக்கு காட்சி கொடி கட்டுகிறார். ஆக்‌ஷன், நடனம் என தூள் கிளப்பும் ஜிவி காதல் காட்சிகளிலும் கமல்போல் ஹீரோயின் உதட்டை கவ்வி முத்தமிட்டு கிளுகிளுப்பு ஏற்றுகிறார்.

ஹீரோயின் அபர்மதியும் குடிசைப்பகுதி பெண்ணாக இருந்தாலும் சிக்கான உடை அணிந்து இளவட்டங்களை ஈர்க்கிறார். பிரகாஷுடன் காதலில் மோதிக்கொள்வதும் பின்னர் அவர் அழுதால் கட்டிபிடித்து தன்னையே கொடுப்பதுமாக நிஜக்காதலியாக மாறுகிறார்.

ஜிவிபிரகாஷின் தாயாக வரும் ராதிகா நடிப்பில் கைதேர்ந்தவர் என்பதை சொல்லத்தேவையில்லை. மகன் நல்வழியில் செல்ல வேண்டும் என்று எண்ணும் சராசரி தாயின் எண்ணங்களை இயல்பாக பிரதிபலிக்கிறார். நந்தன் ராம், பசங்க பாண்டியும் சொல்லும்படி நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.  ரவிமரியா மீண்டும் வில்லன் வேடம் ஏற்று முறைப்பு காட்டுகிறார்.

சேரி பகுதி மக்களின் வாழ்க்கைக்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் புலி பட தயாரிப்பாளர் பி டி செல்வகுமார் நடித்துள்ளார்.

பொழுதுபோக்காக ஒரு கதை கொடுத்துவிட்டு எளிதாக கடந்துபோகும் ஆள் இல்லை இயக்குனர் வசந்த பாலன். வெயில், அங்காடித்தெரு என படத்துக்கு படம் ஒரு சமூக அவலத்தை படம் பிடித்துகாட்டும் சமூக போராளியான அவர் இப்படத்தில் அந்த பணியை செய்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஒ கே.

ஜெயில் – சேரி பகுதி மக்களின் வாழ்வியல்.

 

Leave A Reply

Your email address will not be published.