ஜாங்கோ திரைப்பட விமர்சனம்)

3

படம்: ஜாங்கோ
நடிப்பு: சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலு பிரபாகரன்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: கார்த்திக் கே தில்லை
தயாரிப்பு: சி.வி.குமார்
இயக்கம்: மனோ கார்த்திகேயன்

பிரபல இருதய மருத்துவர் சதீஷ்குமார் தீடீரென்று மண்ணில் விழும் விண்கல் ஒன்றின் கதிர் வீச்சு தாக்கி பாதிக்கப்படுகிறார். அன்றுமுதல் அவருக்கு முதல்நாள் என்ன சம்பவங்கள் நடக்கிறதோ மறுநாளும் அதற்கடுத்த நாளும் அதே சம்பவங்கள் மட்டுமே நடக்கிறது. இந்த அதிசய நிகழ்வால் தன் மனைவியை யாரோ மர்ம நபர்கள் சுட்டுக்கொல்லப் படுவது தெரிகிறது. மனைவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறார். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் அவரை தடுக்கிறது. திரும்ப திரும்ப ஒரேநாட்களில் சதீஷ்குமார் பயணிப்பதால் மனைவியை மீட்க தொடர்ச்சியாக முயற்சிக்கிறார் அவரால் மனைவியை காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

இருதய அறுவை சிகிச்சை மருத்துவராக புதுமுக நடிகர் சதீஷ்குமார் நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்து நடித்திருப்பது அவரது தைரியத்தை காட்டுகிறது.

டைம் லூப்பில் சிக்கி இருக்கும் சதீஷ்குமார் வீட்டு வேலைக்காரி தினமும் வெண்டைக்காய் சாம்பார் வைப்பதாக சொல்வதை கேட்டு எரிச்சல் அடைவது காமெடி.

சதீஷ்குமார் மனைவியாக மிருணாளினி நடித்திருக்கிறார். இருவரும் தங்களது காட்சிகளை எப்படி நினைவு வைத்து நடித்தார்கள் என்பதே பெரிய கதையாக இருக்கும்போலிருக்கிறது.

திரும்ப திரும்ப மிருணாளினியை சுட்டுக்கொள்ளும் காட்சியும் அதை தொடர்ச்சியாக தடுக்கும் முற்சியில் சதீஷும் நடித்திருப்பது ஒரு கட்டத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தி விடுகிறது.

இப்படி கூட நடக்குமா என்று மனதில் கேள்வி எழும்போது அதை நம்பும்படி செய்வதற்காக இரண்டு பெரிய எந்திரங்களை இயக்குனர் வடிவமைத்து மிரட்டி இருப்பது பாராட்டத்தக்கது.
விண்ணிலிருந்து வரும் எரிகல், அந்தரத்தில் மிதந்து கதீர் வீச்சை கக்கும் எந்திரம், அந்த கதிர்வீச்சை அழிக்க விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் ஜாங்கோ என்ற் எந்திரம் என ஹாலிவுட் தரத்துக்கு காட்சிகளை டிசைன் செய்திருக்கிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன்.

கருணாகரன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும். ஹீரோவின் நண்பராகவும் வந்து காமெடி செய்கிறார். மிருணாளினியின் அளவான நடிப்பு அழகு. வேலு பிரபாகரன் விஞ்ஞானியாக வந்து படத்தின் சஸ்பென்ஸுகளுக்கு தீர்வு கொடுக்கிறார்,

சி வி குமாரின் தயாரிப்பில் படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே தில்லை, இசை அமைப்பாளர் ஜிப்ரான், கிராபிக்ஸ் மற்றும் வி எப் எக்ஸ் காட்சிகள் அமைத்த தொழிநுட்ப கலைஞர்கள் என எல்லோருமே ஒத்த சிந்தனையுடன் இணைந்து பணியாற்றியிருப்பதால் படத்தின் தரம் ஹாலிவுட்டை தொட்டிருக்கிறது.

ஜாங்கோ – விஞ்ஞான ரதியான டைம் லூப் படம்.

Leave A Reply

Your email address will not be published.