ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி ஷூட்டிங் முடிந்தது கங்கனா நெகிழ்ச்சி

15

மறைந்த முதல்வர் ஜெ. வாழ்க்கை வரலறாக உருவாகி வரும் படம் தலைவி. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்தது என்று ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனா ரணவத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

“எங்களது பெரும் லட்சியப்படமான ‘தலைவி – புரட்சித்தலைவி’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. ஒரு நடிகைக்கு எப்போதாவதுதான் இப்படி ரத்தமும், சதையுமாக ஒரு படம் அமையும். அதில் நான் காதலுடன் விழுந்துவிட்டேன். கடினமாகத்தான் உள்ளது, இப்போது எதிர்பாராமல் ‘பை’ சொல்ல வேண்டிய நேரம். வாழ்நாளில் ஒரே முறை கிடைக்கும் ஒரு வாய்ப்பு, குழுவின் ஒவ்வொரு அற்புதமான உறுப்பினருக்கும் நன்றி, நன்றி,” என கங்கனா மனப்பூர்வமாய் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.