ஜெயம் ரவியின் புதிய படம்

1

ஜெயம் ரவி நடித்த பூமி படம் கடந்த ஜனவரியில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், அஹ்மத் இயக்கும் ஜனகனமன ஆகிய படங்கள் ஜெயம் ரவி கைவசம் உள்ளன.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜனகனமன படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. இதில் நாயகியாக டாப்சி நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க வேண்டி உள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவிலேயே முழு படப்பிடிப்பை நடத்தும் வகையில் புதிய படமொன்றில் நடிக்க ஜெயம் ரவி தயாராகி உள்ளார். இந்த படத்தையும் அஹ்மத்துவே இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது

Leave A Reply

Your email address will not be published.