’அகிலன்’ படத்துக்காக நான்கு கப்பல்களை வாடகைக்கு வாங்கி ஷூட்டிங் நடந்தது!

0

ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் விரைவில் வெளியாக உள்ளது. அதை அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தை இயக்கியவர். 2015ல் பூலோகம் திரைக்கு வந்தது. சார்பட்டா பரம்பரை குத்துச் சண்டை படங்களுக்கெல்லாம் முன்னோடியாக அந்தப் படம் அமைந்தது. த்ரிஷா அதில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருந்தார். தற்போது கல்யாண கிருஷ்ணனும், ஜெயம் ரவியும் மீண்டும் இணைந்து உருவாக்கி வரும் படம் ’அகிலன்’. இப்படத்திற்கு மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

ஜெயம் ரவியின் 25வது படமான இதில் மரைன் இன்ஜினியராக நடிக்கிறார் இதன் படப்பிடிப்பு . கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஜோடியாக பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்து வருகின்றனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு காசிமேடு அருகே நடந்து வருகிறது. துறைமுகப் பகுதி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு விதவிதமான நான்கு சரக்கு கப்பல்களை வாடகைக்கு வாங்கி, படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இதுபற்றி படக்குழு கூறும்போது, “கண்டெய்னர் கப்பல் உட்பட நான்கு விதமான சரக்கு கப்பல்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அதற்கான வாடகை அதிகமானதுதான். இருந்தாலும் கதைக்கு முக்கியம் என்பதால் அதில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. 90 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.