நடிகை ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலமானார்..

1

கறுப்பு வெள்ளை திரைப்பட காலம் முதல் நடித்து வந்தவர் ஜெமினி ராஜேஸ்வர். ஜெமினி நிறுவனம தயாரித்த சந்திரலேகா படத்தில் நடித்ததால் இவரது பெயருடன் ஜெமினி என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டடது. ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 94. பிறந்த தேதி 22/9/1927  இறந்த தேதி 27/6/2021)

ஜெமினி ராஜேஸ்வரி பூர்வீகம் காரைக்குடி. சிறுவயதிலேயே நாடக மேடை ஏறிவிட்டார். ஜெமினியின் வெற்றிப்படமான ‘சந்திரலேகா’-வில் குரூப் டான்ஸ் ஆடியவர். அப்போது இவரது வயது எட்டு. மாதச் சம்பளம் ரூ-75/-.ஜெமினியின் விதிகளை மீறி வெளி நாடகம் ஒன்றில் நடித்ததனால் அங்கிருந்து விலக்கப்பட்டார்.

====================================================================================

அன்று கண்ட முகம் படத்தில் பாண்டரிபாயுடன் ஜெமினி ராஜேஸ்வரி

-====================================================================================

1000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி வில்லன் கே.கண்ணனின் ‘கண்ணும் இமையும்’ நாடகத்தில் இவர் நடித்தபோது அதைப்பார்த்த இயக்குநர் ஜோசப் தளியத் ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் ஒரு வாய்ப்பை இவருக்கு அளித்தார்.

இதுவரை விளையாட்டுக் கல்யாணம், நிறம் மாறாத பூக்கள் (தமிழ்-தெலுங்கு), பிரியா, சூறாவளி, ஜோதி, நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, 16 வயதினிலே, கண்ணுக்கு இமை காவல், மண்வாசனை போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கே.பாலாஜி அவரது பல படங்களில் இவருக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளார்.இவர் எத்தனைப் படங்கள் நடித்திருந்தாலும் இவரை ரசிகர்களிடத்தில் தெரிய வைத்தவர் பாரதிராஜா. ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவளாச்சே” என்ற பழமொழியால் காந்திமதியை நக்க;லடிப்பார். ’16 வயதினிலே’ படத்தில்  வரும் இந்த ஒரு வசனம் அவரை பிரபலமாக்கியது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘எதிர் நீச்சல்’ படத்திலும் ஜெமினி ராஜேஸ்வரி நடித்துள்ளார்.

 

Actress Gemini Rajeshwari passed away this morning

Contact : 93601 62084

Son – Dakshinamurthy

Leave A Reply

Your email address will not be published.