இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நினைவு நாள் இன்று

கமல்ஹாசன் அலுவலகத்தில் உள்ள சிலைக்கு அஞ்சலி

13

இயக்குனர் சிகரம் என்று திரையுலகினரால் போற்றப்படுபவர் இயக்கினர் கே.பலசந்தர். இவர்  ஜூலை 09, 1930ம் ஆண்டு  நன்னிலம், தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தார். சூப்பர் ரஜினிகாந்த்தை திரையுலக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் பல்வேறு நட்சத்திரங்களை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன்  திறமையை  கண்டறிந்து அவருக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களை அளித்து அவருக்கும் குருவாக மாறியவர்.

இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என்ற பண்முகம் கொண்ட கே.பலசந்தர் தென்னிந்தியாவின் சத்யஜித்ரே என்றும் போற்றப்படுகிறார். பல்வேறு சாதனை படங்களை அளித்து சாதனைகள் பல  படைத்த பாலசந்தர் 23 14 2014 அன்று காலமானார்.  அவரது நினைவு நாள் இன்று. உடல் மறைந்தாலும் அவர் புகழ் நிலைத்து நின்றுவிட்டது.  அவரது நினைவுநாளில் சென்னை டிடிகே சாலையில் உள்ள கமல்ஹாசன்னின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் அலுவலத்தில் உள்ள இயக்குனர் கே.பாலசந்தர் உருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. திரையுலகினர் ஏராளமானவர்கள் அவரது நினைவை போர்றி அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.