கார்த்திக் ராஜா இசையில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’

இசை கோர்ப்பு பணி தொடக்கம்

21

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க,  ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின் மெண்ட் தயாரிக்கும் படம் “பிசாசு 2. இப்படத்திற்கு இசையமைக்கிறார் கார்த்திக் ராஜா.
மிஷ்கின் படங்களில் இசை தனித்து தெரியும். இசையின் வலிமை வெகு அழகாக படத் துடன் பொருந்தி இருக்கும். இசையை படத்திலிருந்து தனித்து பிரிக்க முடியாது. ரசிகர்களை பிரமிக்க வைக்கும் மிஷ்கின் பட இசை படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக வே இருக்கும். அவரது படங் களில் பாடல்கள் மெகா ஹிட் ஆக இதுதான் காரணம். தற்போது ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிக்க, மிஷ்கின் இயக்கும் “பிசாசு 2” படத்தில் நேர்த்தியான, தேர்ந்த இசை யை தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் அவர் இணைந் திருக்கிறார். படத்தின் இசைக் கோர்ப்பு வேலைகள் ஏற்கன வே ஆரம்பித்துவிட்ட நிலை யில், மிஷ்கின் அதனை, மிகவும் மகிழ்ச்சியான அனுப வம் எனக்குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

 


இது குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது:
பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்கமுடியாத இசை யும் ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக் கான முக்கியதுவம் விட்டுப் போய்விடக்கூடாது என நினைத்தேன். இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இக்கதையை கூற நினைத்தேன். தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான, பல படங்களுக்கு உயிர் தந்தி ருக்கிறது. அவருடன் இசைய மைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் பெரும் சந்தோஷத்தை தருவதாக அமைந்திருக்கிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப் பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன் என்றார்.
மேலும் பிசாசு 2 படம் குறித்து கூறும்போது, ’படத் தின் டைட்டில் லுக்கிற்கு ரசிகர்கள் தந்த பேராதரவை கண்ட போது, பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களைப் போலவே நானும் “பிசாசு 2” இப்படத்தை முழு வடிவமாக பெரிய திரையில் காண ஆவலுடன் உள்ளேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுதாக பூர்த்தி செய்ய, படத்தின் ஒவ்வொரு நொடியையும் வெகு கவனமுடன் செதுக்கி, உருவாக்கி கொண்டிருக்கி றேன். இந்த நேரத்தில் என்னையும் இந்த கதையை யும் முழுதாக நம்பிய ராக்ஃபோர்ட் எண்டர்ட்யின் மெண்ட் நிறுவன தயாரிப் பாளர் T. முருகானந்தம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார் மிஷ்கின்.

Leave A Reply

Your email address will not be published.