டேக் டைவர்ஷன்’ படத்தின் பர்ஸ்ட்லுக்: கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு

1

 

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதை யாக உருவாகி வரும் படம் ‘டேக் டைவர்ஷன்’ . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து படக்குழுவின ரை வாழ்த்தியது அனைவருக்கும் தெரியும் . அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனமாடிக் கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

தேவா பாடிய அந்தப் பாடலைக் கேட்டு மிகவும் உற்சாகமான சாண்டி ,அந்தப் பாடலுக்கு ஒன்றரை நாளில் நடனம் அமைத்துக் கொடுத்து படக்குழுவினருக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

அடுத்தபடியாக படத் துக்குப் பலம் சேர்க்கும் அம்சமாக
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்  வெளியிட்டார்.

முதல் பார்வையில் காட்சி களைப் பார்த்துப் பாராட்டியதுடன் படக்குழு வினரையும் வாழ்த்தினார். இதேபோல் பர்ஸ்ட் லுக்கை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடன இயக்குநர் சாண்டியும் வெளியிட்டார்கள்.இப்படி வரிசையாக திரையுல கினரின் ஊக்கப்படுத்து தல்களால் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

“வாழ்க்கைப் பயணத்தில் நாம் போக நினைக்கும் இடத்தை சென்றடைய பல மாற்றுப் பாதைகள் நம்மை திசைதிருப்பும், ஆயினும் விடாமல் போராடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையே நகைச் சுவையுடன் திரையில் காட்டியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.

‘பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத் தில் நடித்துள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார், நாயகியாக பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகி யாக காயத்ரி நடித்துள்ளார்.

ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ள னர்.

படத்திற்கு இசையமைத் துள்ளார் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே ‘நெடுநல் வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.

 

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் பணியாற்றி யுள்ளார். படத்தொகுப்பு – விது ஜீவா.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.