கபடதாரி (பட விமர்சனம்)

74

 

படம்:கபடதாரி

தயாரிப்பு: லலிதா தனஞ்செயன்

நடிப்பு: சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ், ஜே எஸ் கே சதிஷ்குமார்,  அபிஷேக் சங்கர், ஜி.தஞ்செயன், ராட்சன் யாசர், சம்பத் மைத்ரேயா, சுமன் ரங்கநாதன், சாய் தீனா,

இசை: சைமன் கே. கிங்

ஒளிப்பதிவு;ராசாமதி

இயக்கம்: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

நகரில் ஒரு இடத்தை தோண்டும்போது குழந்தை, பெண் உள்ளிட்ட 3 பேரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக் கப்படுகிறது. அதை காணும் போக்குவரத்து  இன்ஸ்பெக் டர் சிபி அதிர்ச்சி அடைந்து  எலும்புகூடுகள் யாருடையது, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க  முயல் கிறார்.  தீவிர தேடுதலில்  கிடைக்கும் ஆதாரத்தை வைத்து கொலையாளியை கண்டுபிடிக்கிறார். பெரிய இடத்திலிருக்கும் அந்த கொலையாளியை சிபியால் பழி வாங்க முடிகிறதா என்பதை படம் விளக்குகிறது.

நாய்கள் ஜாக்கிரதை சத்யா, ஜாக்ஸன் துரை என அடுத்த டுத்த தனது படங்களை சிபி சத்யராஜ் வித்தியாசமான கதைக்களத்துடன் தேர்வு செய்து நடிப்பதால் தனது இடத்தை அவரால் தக்க வைக்க முடிகிறது. அதுபோல் தான் கபடதாரி கதையும் வித்தியாசமான கதைகளத் துடன் தேர்வு செய்து நடித் திருக்கிறார். டிராபிக் போலீஸ் சீருடையை அணிந்துக் கொண்டு கொலை வழக்கை கண்டு பிடிக்கும் வேடம் என்றால் வித்தியாசம்தானே.

நாசர் வீட்டுக்கு சென்று அவரிடம் பழைய விஷயங் களை சொல்லி மீண்டும் அவரை ஏற்கனவே அவரால் கைவிடப்பட்ட வழக்கை கையில் எடுக்க வைக்கும் முயற்சிகளும் பிறகு அது கைகொடுத்ததும் நாசரே களத்தில் இறங்கி  சிபிக்கு உதவுவதும் கதையின் போக்கை விறுவிறுப்பாக்கு கிறது.

அரசில்வாதிகள் போலீஸ் பற்றி வில்லங்கமாக செய்தி கள் போட்டு பலரிடம் அடி வாங்கிக்கட்டும் ஜெயபிரகாஷ் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரம் என்பது கடைசியில் தெரிகி றது. நந்திதா சுவேதா கொடுத்த வேலை செய்து விட்டு சென்றி ருக்கிறார்.

படத்தின் இரண்டாம்பாதி வேறுகளத்துக்குள் புகுந்து விடுவது கதையின் நிறத்தை யே மாற்றுகிறது. அரசியல்வாதியாக வரும்  சம்பத் மைத்ரேயா யார் இந்த புதுவில்லன் என கேட்க  வைக் கிறார். சுமன் ரங்கநாதன் கவர்ச்சி பாடலுக்கு ஆடிவிட்டு செல்கிறார். இத்தனை ஆண்டுக்கு பிறகு உடலை சிக்கென வைத்திருப்பது பிளஸ்.

விஜய்நகர பேரரசு, லட்சக் கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை என கதைக்கு பின்னணியை சேர்த்திருப்பது கதைக்களத்தை நம்பகமாக்குகிறது.

ஜே. எஸ்.கே. சதிஷ்குமார், டிவி எடிட்டர் ஜி.தனஜ்செயன்  அளவுடன் நடித்திருக்கின் றனர். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பாத்திரங் களுக்கு உயிர் கொடுத்திருக்கி றார்.

ராசாமதி கேமரா படத்துக்கு பலம் சேர்க்கிறது. சில இடங் களில் பின்னணி இசை காட்சிக்கு மெருகேற்றுகிறது

கபடதாரி- சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு பிடிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.