படம்: கடைசி விவசாயி
நடிப்பு: நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு, ரெய்ச்சல், முனீஸ்வரன்,
இசை: சந்தோஷ் நாராயணன்,
பின்னணி இசை: ரிச்சர்டு ஹார்வின்
ஒளிப்பதிவு: எம்.மணிகண்டன்
தயாரிப்பு: எம்.மணிகண்டன்
இயக்கம்: எம்.மணிகண்டன்
வயது முதிர்ந்த விவசாயி மாயாண்டி (நல்லாண்டி) தன் வயலில் தானே வேலைசெய்து விவசாயம் செய்கிறார். மனிதாபிமானம் கொண்ட இவர சூதுவாது இல்லாத குணத்துடன் வாழ்ந்து வருகிறார். தன் வயலில் இறந்து கிடந்த 3 மயில்களை கண்டு அதிர்ச்சி அடையும் அவர் அவைகளை தன் நிலத்திலேயே புதைக்கிறார். சிலர் இதை தவறாக போலீஸில் புகார் செய்கின்றனர். மயில்களை மாயாண்டி கொன்று புதைத்துவிட்டதாக புகாரில் தெரிவிக்கப் பட மயாண்டியை போலீஸார் கைது செய்து வழக்கு பதிந்து மயில்களை கொன்றது சட்டத்துக்கெதிரானது என்று அடுக்கடுக்காக அவர் மீது பல குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. கோர்ட்டில் நீதிபதி முன் நிறுத்தப்படும் பெரியவரிடம் எதிர்தரப்பு கேள்வி எழுப்பி அவரை குழப்பப் பார்க்கின்றனர். ஆனால் மாயாண்டி அளிக்கும் எதார்த்தமான பதில்கள் அப்ளாஸ் பெறுகின்றன.
மாயாண்டியாக நடித்திருக்கும் நல்லாண்டி கிராமத்தில் எப்படி வெள்ளை மனதுக்காராக வாழ்கிறாரோ அதேபோல் எதார்த்தமாக காட்சிகளும் நடித்து கவர்கிறார். கோர்ட்டு காட்சிகளிலும் அவர் சினிமாத்தனமில்லாமல் வசனம் பேசுவதும், நீதிபதி வந்து அமரும்போது யார் அந்த பெண் என்று அப்பாவித்தனமாக கேட்பதுமாக அசத்தி இருக்கிறார் விரக்தியுடன் சுற்றிவரும் விஜய் சேதுபதி கிராமத்து முகத்தை வெளிப்படுத்துகிறார். யானை வளர்ப்பவராக யோகி பாபு நடித்திருக்கிறார்.
மணிகண்டனே இயக்கம், ஒளிப்பதிவு என பொறுப்பேற்று அர்த்தமுள்ள படமாக தமிழ் திரையுலக்கு தந்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் 2 பாடல் அர்த்தம் பொதிந்து ஒலிக்கிறது..
ரிச்சர்ட் ஹார்வி பின்னணி இசை அமைத்துள்ளார்
கடைசி விவசாயி – பார்ப்பவர்கள் மனதை நியாயம் பேசத் தூண்டும்..