காதல் திரைப்பட புகழ் விருச்சககாந்த் மரணம்…

 ஆட்டோவில் உறங்கியபடியே உயிரிழந்த பரிதாபம்…

1

காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விருட்சககாந்த். இத்திரைப்படத்தில் ‘நடிச்சா ஹீரோதான் சார்..’ என்ற ஒரே வசனத்தை பேசி பாபு என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலம் அடைந்தவர் இவர். அதனை தொடந்து சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் போதிய வருமானம் இன்றி சூளை அங்காளம்மன் கோயில் அருகில் உள்ள நடைபாதையில் வசித்து வந்துள்ளார்.

தாய்,தந்தையரின் இறப்புக்கு பின் மனநலம் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் தெருவோரம் உள்ள ஆட்டோ நிறுத்துமிடங்களில் உறங்கி வந்துள்ளார். இந்நிலையில் அண்மைய்ல் ஆட்டோவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.எதனால் உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.