காஜல் நடிக்கும் “கோஸ்டி” ஷூட்டிங் முடிந்தது

1

 

நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான “கோஸ்டி” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்தது. ‘குலேபகாவலி’ படப்புகழ் இயக்குநர் S.கல்யாண் எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இனைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் அனைத்து வசன காட்சிகளும் படமாக்கப் பட்ட நிலையில், படத்தின் ஒரு புரொமோ பாடல் மட்டும், கோவிட் பொது முடக்கத்தால், படமாக்கப் படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதித்த பின்னர், படக்குழு அரசு அறிவித் துள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் கடைபிடித்து, படத்தின் புரோமோ பாடலை படமாக்கி முடித்துள்ளது. படத்தின் முழுப்படப்பிடிப் பையும் முடித்ததில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இது குறித்து கூறியதாவது:
உண்மையில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் படமான “கோஸ்டி” படப்பிடிப்பு முடிந்ததால் மட்டுமல்ல, மொத்த திரைத்துறையும் மீண்டும் பணிகளை ஆரம்பித்தி ருப்பது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையில் திரைத் துறையினர் பாதிக்கப் படக்கூடாது, என்பதை புரிந்துகொண்டு, எங்கள் பணிகளுக்கு அனுமதி யளித்த, தமிழக அரசுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறோம். அரசு அறிவித்துள்ள அனைத்து சுகாதார நெறிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் முறையாக கடைபிடித்து, படத்தின் புரோமோ பாடலை படமாக்கி முடித்துள்ளோம். படத்தை குறித்தபடி முடிக்க, பெரும் ஒத்துழைப்பை நல்கிய, நடிகை காஜல் அகர்வா லுக்கு நன்றி. இயக்குநர் கல்யாண் அசாதாரண திறமை குறித்து திரைத் துறையில் அனை வருக்கும் தெரியும். இந்த படத்தில் பல வெளிப்புற சிக்கல்களுக்கு இடை யிலும், சொன்னது போல் படப்பிடிப்பை திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் கச்சித மாக முடித்து, சாதித்து காட்டியுள்ளார். கடும் உழைப்பினை தந்த படக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது துவக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகி றது. விரைவில் படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றனர்.

“கோஸ்டி” படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக் கப்பட்டுள்ளது.

இயக்குநர் S.கல்யாண் எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரித்துள்ளனர். காஜல் அகர்வால் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, சுப்பு பஞ்சு அருணாச்சலம்,மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ஶ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தான பாரதி, நரேன், தங்க துரை மற்றும் பலர் முக்கிய பாத்திரங் களில் நடித்துள்ளனர்.

 

இப்படத்துக்கு இசை  சாம் CS.ஒ ஒளிப்பதிவு ஜேக்கப் ரத்தினராஜ். கலை கோபி ஆனந்த்.ப படத்தொகுப்பு விஜய் வேலுக்குட்டி,ச சண்டைப்பயிற்சி பில்லா ஜெகன்.பா டல்கள் – விவேக், கு.கார்த்திக்.எ எக்ஸிக்யூட்டிவ்புரடியூசர் – A.குமார். புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – K. சக்திவேல், சுசி காமராஜ்.

Leave A Reply

Your email address will not be published.