பேய் கதையில் காஜல் அகர்வால்

16

பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதுமாதிரியான படங்கள் அதிகம் வருகின்றன. நடிகர், நடிகைகளுக்கும் பேய் கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது.

ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் திகில் படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் காஜல் அகர்வாலும் பேய் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை டீகே இயக்குவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அவர் சொன்ன கதை காஜல் அகர்வாலுக்கு பிடித்து போனதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 4 கதாநாயகிகள் நடிப்பதாகவும், அதில் ஒருவர் காஜல் அகர்வால் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாகவும் நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.